கால்சென்டர்-காதலியை கொன்று வாலிபர் தற்கொலை
பெங்களூர்: தான் காதலித்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயமானதால் ஆத்திரமடைந்த கால்சென்டர் ஊழியர், காதலியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூர் காடுகொண்டனஹள்ளி பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரி என்பவரது மகள் கீதா. கால்சென்டரில் பணியாற்றி வந்தார். அதே கால்சென்டரில் பணியாற்றிய கோவிந்தாபுரத்தைச் சேர்ந்த ஜாகீர் உசேனும், கீதாவும் கடந்த 4 மாதங்களாக காதலித்து வந்தனர்.
கீதாவின் வீட்டுக்கு ஜாகீர் அடிக்கடி செல்வார். ஆனால், இருவரும் காதலித்தது அவர்களின் குடும்பத்தாருக்கு தெரியாது.
இதற்கிடையில், கீதாவுக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன் தினம் பணி முடித்து கீதா வீடு திரும்பினார். ஜாகீரும் கீதாவுடன் வந்தார். அனைவரும் ஒன்றாக உணவருந்தினர்.
பின்னர் ஒனி அறையில் கீதாவும் ஜாகீரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென கீதாவின் அலறல் சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து ஜாகீரின் அலறல் சத்தமும் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த கோடீஸ்வரியும் அவரது மகனும் அந்த அறைக்கு ஓடினர்.
உள்பக்கம் பூட்டப்பட்டிருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர்.
கீதாவின் கழுத்தை அறுத்து கொலை செய்த ஜாகீர், தன்னுடைய கழுத்தையும் அறுத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். அப்போது ஜாகீரின் பாக்கெட்டில் இருந்து கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதில் கீதாவை காதலிப்பதாகவும், அவர் வேறு திருமணம் செய்து கொள்வது தனக்கு பிடிக்காததால் அவரை கொலை செய்து, தானும் தற்கொலை செய்து கொள்வதாக எழுதியிருந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications