தர்மபுரி-எய்ட்ஸ் விரக்தியில் குடும்பம் தற்கொலை
தர்மபுரி: எய்ட்ஸ் தாக்கியதால் விரக்தியடைந்து பாயாசத்தில் விஷம் கலந்து குடித்து ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டது.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள பொன்னேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (35). இங்குள்ள கயிறு திரிக்கும் ஆலையில் பணியாற்றினார்.
இவரது மனைவி வசந்தா (35). இவர்களுக்குமாதேஷ் (14) என்ற மகனும், பிரியா (13) என்ற மகளும் இருந்தனர்.
நான்கு பேருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மருத்துவ சோதனையில் சுரேஷூக்கு எய்ட்ஸ் நோய் தாக்கியிருப்பது தெரியவந்தது.
அவருக்கு மட்டுமின்றி அவரது மனைவி மற்றும் குழந்தைகளும் எய்ட்ஸ் நோய் தாக்கத்துக்கு உள்ளாகியிருப்பது தெரியவந்தது.
இந் நிலையில் பாயாசத்தில் விஷம் கலந்து குடித்து கணவன், மனைவி, குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டனர்.
நீண்ட நேரமாகியும் அவர்களது வீடு திறக்காமல் இருந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த கதவை உடைத்து சென்றனர்.
இறந்து கிடந்த 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications