போலி பாஸ்போர்ட்-ட்ராவல்ஸ் அதிபர் கைது
சென்னை: போலி பாஸ்போர்ட் மற்றும் போலி தொழிற்கல்வி சான்றிதழ்கள் தயாரித்து வழங்கியதாக டிராவல்ஸ் நிறுவன அதிபர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கம்ப்யூட்டர் உள்ளிட்ட சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை விமான நிலையத்தில் இருந்து கனடா நாட்டிற்கு போலி பாஸ்போர்ட் மூலம் செல்ல முயன்ற ரவி என்பவரை குடியேற்ற அதிகாரிகள் கைது செய்தனர். அவரது ஆவணங்கள் போலியானவை என்பது தெரியவந்தது.
சென்னை புறநகர கமிஷனர் எஸ்.ஆர். ஜாங்கிட் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு உதவிக் கமிஷனர் எஸ்.நவநீத கிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை ரவியிடன் விசாரணை மேற்கொண்டது.
ரவி கொடுத்த தகவலின்படி அண்ணாநகரில் செயல்பட்டு வந்த டிராவல் பேசேஜ் சென்னை லிமிடெட் என்ற நிறுவனத்தில் போலீசார் ரெய்ட் நடத்தினர்.
அங்கு போலி பாஸ்போர்ட்டுகள், போலி தொழிற்கல்வி சான்றிதழ்கள், தனியார் நிறுவனங்கள் பெயரில் முத்திரைகள், வருமான வரி அலுவலக முத்திரைகள் தயார் செய்து விசா பெறுவதற்கு வெளிநாட்டு தூதரகங்களில் பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து டிராவல்ஸ் உரிமையாளரும், போலி ஆவணங்கள் தயாரித்தவருமான ரத்தினேஸ்வரன், அவருக்கு உதவியாக இருந்த ராஜசேகரன், வைரவ சுந்தரம், அப்துல் வாகித் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
போலியாக தயாரித்த தொழிற்கல்வி சான்றிதழ்கள், அவற்றை தயாரிக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர் மற்றும் பிரிண்டர், போலி முத்திரைகள், பாஸ்போர்ட்டின் உதிரி பக்கங்கள், மாருதி காரும் பறிமுதல் செய்யப்பட்டதாக கமிஷனர் ஜாங்கிட் தெரிவித்தார்.
கைதான 4 பேரும் ஆலந்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications