2015க்குள் நிலவில் இந்தியர்!: இஸ்ரோ
சென்னை: 2015ம் ஆண்டுக்குள் இந்தியர் ஒருவர் நிலவில் காலடி எடுத்து வைப்பார் என்று இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து நேற்று பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் சந்திராயன் -1 விண்கலம் நிலவுக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது. 2 ஆண்டுகள் இந்த விண்கலம் நிலவில் பயணித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளும்.
இந் நிலையில் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் செய்தியாளர்களிடம் சந்திரனுக்கு ஆள் இல்லாத விண்கலமான சந்த்ராயன் வெற்றிகரமாக அனுப்பப்பட்டுள்ளது.
பூமியின் சுற்றுப்பாதையில் சந்திராயன் 2 நாட்கள் சுற்றும். அதன்பிறகு அது நிலவை நோக்கி பயணிக்கும். சந்திரனை அடைய மொத்தம் 4 லட்சம் கிலோ மீட்டர் தூரம் அது பயணம் செய்ய வேண்டு்ம்.
சந்திராயன் விண்கலம் நவம்பர் 8ம் தேதி சந்திரனை நெருங்கி அதன் நீள்வட்ட பாதையில் 100 கிலோ மீட்டர் தூரத்தில்
சுற்றும். 15ம் தேதி சந்திராயனில் உள்ள மூன் இம்பேக்ட் புரோப்' என்ற துணை விண்கலத்தை மட்டும் சந்திரனில் இறங்கும். இந்த சாதனம் சந்திரனில் உள்ள நீர் ஆதாரம், கனிமவளம் போன்றவை பற்றி ஆய்வு செய்து பூமிக்கு தகவல்களை 15ம் தேதி முதல் அனுப்பும்.
நாட்டப்படுகிறது தேசியக் கொடி:
மேலும் அந்த சாதனத்தில் இந்திய தேசியக் கொடியும் அனுப்பப்பட்டுள்ளது. அதாவது சந்திரனில் இந்திய தேசியக்
கொடி நாட்டப்படுகிறது.
சந்திராயன் விண்கலம் அனுப்பும் தகவல்கள் பெங்களூர் அருகேயுள்ள பைலாலூர் கிராமத்தில் இஸ்ரோ அமைத்துள்ள
நெட்வொர்க் மையத்தில் கிடைக்கும். இதற்காக அங்கு சிறப்பு ஆண்டெனா'க்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து 2
ஆண்டுகள் இந்த சந்திராயன் விண்கலம் செயல்படும். 2 வருடஇறுதியில் சந்திரன் பற்றிய அனைத்து வரைபடங்களும் (மேப்) நமக்கு கிடைக்கும்
சந்திராயன்-2 விண்கலம் 2009-ம் ஆண்டின் இறுதியிலோஅல்லது 2010-ம் ஆண்டின் தொடக்கத்திலோ விண்ணில்ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் செலுத்தப்படும். இதன் திட்டமதிப்பு ரூ.425 கோடி ஆகும்.
சந்திராயன்-2 விண்கலம் சந்திரனில் இறக்கப்படும். சந்திராயன்-2 திட்டம் ரஷ்யாவின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்படும்.
2015ல் நிலவில் இந்தியர்:
சந்திரனுக்கு 2015ம் ஆண்டுக்குள் இந்தியா மனிதனைஅனுப்பும். 2 பேர் அனுப்பி வைக்கப்படுவார்கள். இந்ததிட்டத்துக்கு ரூ.12,000 கோடி செலவாகும். இதற்கானதிட்டம் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் அனுமதிக்குஅனுப்பப்பட்டுள்ளது.
சந்திரனுக்கு மனிதனை அனுப்புவது மிகவும் சவாலான பணி.
பேட்டியின்போது சந்திராயன்-1 இயக்குனர் மயில்சாமி அண்ணாத்துரை மற்றும் விஞ்ஞானிகள் உடன் இருந்தனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications