வெண்ணிலாவை நோக்கி..கருணாநிதி பாராட்டு
சென்னை: சந்திராயன் விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு இந்திய விஞ்ஞானிகளுக்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
சந்திர மண்டலத்தில் கண்டு தெளிவோம் என்று பாடி, அன்று மாகவி பாரதி கண்ட கனவை நனவாக்கும் அரிய முயற்சியில் ஈடுபட்டு, அதன் முதற்படியாக வெண்ணிலாவை நோக்கி சந்திராயன் விண்கலத்தினை ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி நிலையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவி, மகத்தான உலக சாதனை நிகழ்த்தியுள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக தலைவர் விஞ்ஞானி ஜி.மாதவன் நாயர் மற்றும் அவருக்குத் துணை நின்ற விஞ்ஞானிகள், விண்வெளி அறிஞர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் தமிழக மக்கள் சார்பில் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சந்திராயன்' விண்கலத்தை உருவாக்கியவர் தமிழகத்தைச் சேர்ந்த பொள்ளாச்சி அருகிலுள்ள கொத்தவாடி கிராமத்தைச் சேர்ந்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை என்பதும், அவர்கடந்த சில மாதங்களாக இரவு பகலாகப் பாடுபட்டு, இந்த சந்திராயன்' விண்கலத்தை உருவாக்கியுள்ளார் என்பதும் எண்ணி உவகையும், பெருமிதமும் அடைகிறேன்.
இந்திய திருநாட்டிற்கு பெருமை தேடித் தந்துள்ள அருமைத்தமிழ் விஞ்ஞானி அண்ணாதுரைக்கும் என் பாராட்டுகள்
உரித்தாகுக.
நிலவை நோக்கி விண்கலம் செலுத்தும் 6-வது நாடாக உலகில் இந்தியா முத்திரை பதித்திட உறுதுணை புரிந்து ஊக்கமளித்து வெற்றி கண்டுள்ள ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாகாந்திக்கும், பிரதமர் மன்மோகன்சிங்-க்கும் என் மனமார்ந்த பாராட்டுகளும், நல்வாழ்த்துகளும் உரித்தாகுக என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications