நகர்ந்தது புயல் சின்னம்; குறைந்தது மழை-வந்தது வெயில்
சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மன்னார் வளைகுடாவை நோக்கி நகரத் தொடங்கியுள்ளதால், கடந்த நான்கு நாட்களாக சென்னையை புரட்டிப் போட்டு விட்ட மழை நின்று விட்டது. நான்கு நாட்ளுக்குப் பிறகு இன்று காலை முதல் ேலசாக வெயில் அடித்து வருகிறது.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழகம் முழுவதும் மழை கொட்டித் தீர்த்து விட்டது. குறிப்பாக சென்னை நகரம் வெள்ளக்காடாகிப் போனது.
இந்த நிலையில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, மன்னார் வளைகுடா நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கன மழை குறைந்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஆங்காங்கே லேசான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை நகரில் பொதுவாக வானம் மேக மூட்டமாக காணப்படும். லேசான மழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கன மழைக்கு இனி வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை முதலே சென்னையில் மழை நின்று விட்டது. இன்று காலை முதல் பிற்பகல் வரை நல்ல வெயில் அடித்தது. சுத்தமாக மழை இல்லாததால் மக்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
நான்கு நாட்களுக்குப் பிறகு வெயில் அடிக்கத் தொடங்கியதால் மக்கள் தீபாவளி பர்ச்சேஸுக்கும், துணிமணிகளை துவைத்துக் காயப் போடுவதிலும் பிசியாகி விட்டனர்.
சென்னை நகரில் இன்று காலை முதல் இயல்பு நிலை திரும்பத் தொடங்கியது.
இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றிப் பார்த்தார்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications