வைகோ, கண்ணப்பன், சீமான், அமீர் கைது: மதிமுக-இயக்குநர்கள் ஆர்ப்பாட்டம்

பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக கூறி வைகோ, கண்ணப்பன் ஆகியோரையும், இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியும், தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்துப் பேசியதாகவும் இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வைகோ, கண்ணப்பன் கைதைக் கண்டித்து நேற்று முன்தினம் முதல் மதிமுகவினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், கண்டனப் பேரணி உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை நுங்கம்பாக்கம் வள்ளுவர்கோட்டம் எதிரே வேளச்சேரி மணிமாறன் தலைமையில் மதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை எதிர்த்தும் அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதைத் இதையடுத்து 135 மதிமுக தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.
இதே போல மெமோரியல் ஹால் முன்பு வடசென்னை மாவட்ட தலைவர் ஜீவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 300 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேலூரில் மதிமுக அமைப்புச் செயலாளர் சுப்பிரமணி தலைமையில் 150 பேர் மறியல் போராட்டம் நடத்திக் கைதானார்கள்.
இதே போல மதுரையில் தலைமை தபால் நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் வீர. இளவரசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மதிமுக தொண்டர்கள் போலீசார் கைது செய்தனர்.
மதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தலைமையில் நாகர்கோயில் கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையடுத்து நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் 38 இடங்களில் மதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். 5000க்கும் மேற்பட்டோர் கைதாகியுள்ளதாக மதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
திரையுலகினரும் ஆர்ப்பாட்டம்
இதேபோல, இயக்குனர்கள் அமீர், சீமானை விடுதலை செய்யக்கோரியும், இலங்கை அதிபர் ராஜபக்சேவிற்கு கண்டனம் தெரிவித்தும், மத்திய அரசு இவ்விஷயத்தில் தலையிடக் கோரியும் ஏவிஎம் ஸ்டுடியோ அருகே இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 150 உதவி இயக்குனர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் முன்னணி இயக்குனர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இன்று காலை உதவி இயக்குனர்கள் சங்கம் சார்பில் ஏவிஎம் ஸ்டுடியோ எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காலை 10 மணியளவில் சுமார் 150க்கும் மேற்பட்ட உதவி இயக்குனர்கள் ஸ்டுடியோ எதிரே உள்ள காமராஜர் சிலை அருகே ஒன்று திரண்டனர்.
அமீர், சீமானை கைது செய்தது தவறு என அவர்கள் கோஷம் எழுப்பினர். மேலும், ஈழத் தமிழர்களை கொன்று குவித்து வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு கண்டனம் தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.
அப்போது உதவி இயக்குனர்கள் சிலர் ராஜபக்சேவின் கொடும்பாவியை கொண்டு வந்து எரிக்க முயற்சித்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து கொடும்பாவியை எரிப்பதை தடுக்க முயற்சித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து உதவி இயக்குனர்கள் 150 பேரை கைது செய்து அருகில் உள்ள சமூக நலக்கூடம் ஒன்றில் அடைத்தனர்.
இந்த ஆர்ரப்பாட்டத்தில் கலந்து கொண்ட இயக்குநர்கள் சுப்பிரமணியசிவா, ஜெகன், ராம், வேல்முருகன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை இயக்குனர் ஆர்.கே. செல்வமணி சந்தித்து பேசினார்.
தங்களு போராட்டம் தொடரும் என இயக்குநர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அடுத்தடுத்து போராடவுள்ளோம். அதுகுறித்து விரைவில் அறிவிப்போம். இயக்குநர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்தபடி படப்பிடிப்பு எதுவும் நடைபெறாது என்றார்.
உதவி இயக்குநர்கள், ரசிகர்கள் மறியல்:
முன்னதாக நேற்று இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் ஆகியோரைக் கைது செய்வதை எதிர்த்து பாரதிராஜா, பாலுமகேந்திரா தலைமையில் இயக்குநர்களும், உதவி இயக்குநர்களும், பெரும்திரளான ரசிகர்களும் போலீஸாரை தடுத்து மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று இரவில் சீமானும், அமீரும் கைது செய்யப்பட்டனர். இந்தத் தகவல் அறிந்ததும், இயக்குநர்கள் பாரதிராஜா, பாலுமகேந்திரா, ஆர்.கே.செல்வமணி, தங்கர்பச்சான், விக்கிரமன், லிங்குச்சாமி, கரு.பழனியப்பன், சேரன், ராம், ஜெகன், பாலாஜி சக்திவேல் மற்றும் ஏராளமான உதவி இயக்குநர்கள், கவிஞர் முத்துக்குமார் உள்ளிட்டோர் திரண்டனர்.
சீமான் வீட்டில் அவர்கள் குவிந்தனர். ரசிகர்களும் பெருமளவில் திரண்டனர். அனைவரும் சீமானையும், அமீரையும் கைது செய்ய விட மாட்டோம் என்று கோஷமிட்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கமாண்டோ படை போலீஸார் குவிக்கப்பட்டனர். இருவரையும் கைது செய்துவேனில் ஏற்ற முயன்றபோது அவர்களைத் தடுக்க இயக்குநர்களும், ரசிகர்களும் முயன்றனர். ஈழத் தமிழர் பிரச்சினையை திசை திருப்பாதே என்று கோஷமிட்டனர்.
அவர்களை சமாளித்து போலீஸார், சீமானையும், அமீரையும் டிஜிபி அலுவலகத்திற்குக் கொண்டு சென்றனர். அங்குள்ள கியூ பிரிவு போலீஸ் தலைமையகத்தில் விசாரணை நடந்தது. பின்னர் இரவு அவர்கள் அங்கேயே தங்க வைக்கப்பட்டனர்.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications