புலிகள் ஆதரவு குரல்-பிரியங்கா மீது பாஜக புகார்
நாகர்கோவில்: ராஜிவ் கொலையாளி நளினியை பிரியங்கா சிறையில் சந்தித்த பின்னர்தான் தமிழ்நாட்டில் புலிகள் ஆதரவு குரல் அதிகரித்துவிட்டது என பாஜக மாநிலத் தலைவர் இல. கணேசன் கூறினார்.
நாகர்கோவிலில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பேச்சு, போராட்டம் அதிகரிக்க தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல சோனியாவும், பிரியங்காவுமே காரணம். ராஜிவ் படுகொலை செய்யப்பட்ட பின் புலிகளை தமிழக மக்கள் ஆதரிக்கவில்லை. மாறாக விடுதலைப் புலிகளின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள நளினியை பிரியங்கா சந்தித்து பேசிய பின்னர்தான் விடுதலை புலிகளுக்கான ஆதரவு குரல் அதிகரித்துள்ளது.
இலங்கை தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. வைகோவை பொறுத்தவரை இலங்கை தமிழர் பிரச்னையில் தன் குரல் முதலில் ஒலிக்க வேண்டும் என்று நினைக்கிறார். கைது செய்யப்படுவோம் என்று தெரிந்தே பேசி கைதாகியுள்ளார்.
தற்போதுள்ள அரசியல் கூட்டணிகள் லோக்சபா தேர்தலின் போது இருக்குமா என்று இப்போது கூற முடியாது. அதனால் 5 மாநில சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி பாஜக முடிவு செய்யும் என்றார்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications