அடுத்த 10 நாட்களில் 25% ஊழியர்கள் வேலை நீக்கம்!!!

இரும்புத்துறை, சிமெண்ட், கட்டுமானம், ரியல் எஸ்டேட், விமான போக்குவரத்துத்துறை, சாப்ட்வேர் துறை, நிதித்துறைகளில் இந்த வேலைகள் பறி போகலாம் என
அஸோசாம் (Associated Chambers of Commerce and Industry of India-ASSOCHAM) தெரிவித்துள்ளது.
விற்பனை-ஆர்டர்கள் குறைந்து போனது, குறைந்து போன லாபம் ஆகிய காரணங்களால் இந்த நிறுவனங்கள் 10 நாட்களுக்குள்ளாகவே இந்த நடவடிக்கையில் இறங்கவுள்ளன என அஸோசாம் தெரிவித்துள்ளது.
ஆசியாவின் 3வது மிகப் பெரிய பொருளாதாரமான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகமாக குறைந்து வருகிறது. 9 சதவீதமாக இருந்த வளர்ச்சி 7 சதவீதத்தை நோக்கி சரிந்து கொண்டுள்ளது என்று கூறியுள்ளது அஸோசாம்.
ஜவுளி நிறுவனங்களிலும் ஆட்குறைப்பு:
அதே போல இந்திய ஜவுளி உற்பத்தித் துறையிலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் துவங்கிவிட்டது. அமெரிக்கா, ஐரோப்பாவில் பல ஜவுளி விற்பனை நிறுவனங்கள் திவால் ஆகி மூடப்பட்டுவிட்ட நிலையில் இந்தியாவுக்கு கிடைத்து வரும் ஆர்டர்கள் சரிந்து வருகின்றன.
இதனால் உற்பத்தியை குறைக்க வேண்டிய நிலைக்கு இந்திய ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. இதனால் வேலை நீக்கமும் கட்டாயமாகிவிட்டது என துணி ஏற்றுமதியாளர் வளர்ச்சி கவுன்சிலான (Apparel Export Promotion Council-AEPC) தெரிவித்துள்ளது.
ஏற்கனவே பல இந்திய துணி உற்பத்தி-ஏற்றுமதி நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன என வர்த்தகதுறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் AEPC செயலாளர் விமல் கீர்த்தி சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் விவசாயத்துக்குப் பின் மிக அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் துறை ஜவுளித்துறை தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா, ஐரோப்பாவின் முன்னணி ஜவுளி விற்பனை நிறுவனங்களான ஸ்டீவ் அண்ட் பாரிஸ், மெர்வின்ஸ் ஆகியவை சமீபத்தில் திவால் ஆகின.
மேலும் பசிபிக் சன் வியர், பேஷன் பக், கேத்தரீன்ஸ், புட் லாக்கர்ஸ், ஆன் டைலர் ஆகிய சர்வதேச ஜவுளி விற்பனை நிறுவனங்கள் அமெரிக்கா-ஐரோப்பா முழுவதும் ஆயிரக்கணக்கான ஸ்டோர்களை மூடிவிட்டன.
மேலும் எடி பாயர், கேச்சே, டால்போட்ஸ், ஜே ஜில், கேப் இன்க், பெப் பாய்ஸ், லெவிஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் விற்பனை மையங்களை பெருமளவில் குறைத்துவிட்டன.
பொருளாதார ஸ்திரமின்மையால் இந்த நிறுவனங்களின் விற்பனை படு பாதாளத்துக்குப் போய்விட்டதால் கடைகளை மூடி வருகின்றன.
-
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்?












Click it and Unblock the Notifications