வைகையில் வெள்ள அபாய எச்சரிக்கை!
மதுரை: கடும் மழை காரணமாக வைகை அணை நிரம்பி வருகிறது. இதனால் வைகை ஆற்றுப் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. தேனி உட்பட 5 மாவட்டங்களில் பெய்த கனத்த மழை காரணமாக வைகை அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியுள்ளது.
இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு முதலாவது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
வைகை அணையின் மொத்த கொள்ளளவு 71 அடியாகும். இதில் வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியுள்ளது.
அணையின் நீர் மட்டம் 68.5 அடியாக உயரும் போது 2வது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். 69 அடியாக உயரும் போது 3வது மற்றும் இறுதி வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும்.
மேலும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்தும் கடந்த ஒரு வார காலத்தில் பெரும் அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த நீரும் வைகை அணையை அடைகிறது.
முல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரம் 136 அடி. இதில் இப்போது 128.2 அடி நீர்மட்டம் உள்ளது.
தற்போது வினாடிக்கு 2031 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. வினாடிக்கு 1544 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
-
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது












Click it and Unblock the Notifications