நெல்லையில் ஒரே எண்ணில் உலா வரும் 2 கார்கள்
நெல்லை: தமிழகத்திலுள்ள வட்டார போக்குவரத்து அலுவலங்களில் எத்தனையோ குளறுபடிகள் நடந்து வருகின்றன. வாகனங்களின் எண்களை கம்யூட்டர்மயமாக்கும் முயற்சியால் எண்கள் விடுபடும் நிலை சில இடங்களில் காணப்படுகிறது.
லைசன்ஸ், ஆர்சி புக், எப்சி சான்றிதழ் பெற சாமனிய மக்கள் போராடி கொண்டிருக்கும் நிலையில் நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகமோ ஒரே எண்ணை இரு நபர்களுக்கு அளித்துவிட்டு தற்போது தவித்துக் கொண்டிருக்கிறது.
நெல்லை டயோசிஸைச் சேர்ந்த விஐபி ஒருவர் ஓராண்டுக்கு முன் தனது சவர்லே காருக்கு குறிப்பிட்ட பேன்ஸி எண்ணைக் கேட்டு விண்ணப்பித்துள்ளார். இந்த எண்ணை பெற அவர் ரூ. 20,000 வரை செலவு செய்ததாகக் கூறப்படுகிறது.
இவர் விண்ணப்பித்தபடியே டி.என். 72 ஏபி 999 என்ற எண் அவருக்கு கிடைத்தது. இவரது செல்போன் எண்ணும் 999 முடிவதால் இந்த எண்ணை விரும்பி கேட்டுள்ளார்.
இந் நிலையில் நெல்லை அரசியல் பிரமுகரான மற்றொரு விஐபி அதே எண்ணை தனது சபாரி காருக்கு கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால், அந்த எண் வேறு ஒருவருக்கு தந்துவிட்ட ஆர்டிஓ அலுவலகம் இந்த எண் இல்லை என்று சொல்லியிருக்க வேண்டும்.
ஆனால், சென்னையில் உள்ள கட்சி பிரமுகர்கள் சிலரை பிடித்து இவரும் அதே எண்ணை பெற்று விட்டார். ஆர்டிஓ அலுவலக உதவியோடு தான் இந்த எண் அவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் கடந்த 6 மாத காலமாக இரு விஐபிகளின் வாகனங்களும் நெல்லையில் ஒரே எண்ணில் உலா வருகின்றன.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications