திமுக தேர்தலில் பயங்கர வன்முறை- எம்எல்ஏ கார் எரிப்பு
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் திமுக ஒன்றியச் செயலாளர் பதவிக்கான தேர்தலில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் திருவையாறு எம்எல்ஏவின் கார் எரிக்கப்பட்டது.
மேலும் துணை எஸ்பியின் மண்டை உடைக்கப்பட்டது. இன்னொரு காவலரின் முகம் உடைந்தது.
தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றிய திமுக செயலாளர் பதவிக்கு பூண்டி வெங்கடேசனும், கல்லணை செல்லக்கண்ணுவும் போட்டியிட்டனர். இவர்களுக்குள் கடும் போட்டி நிலவியது.
இந்தத் தேர்தல் பூதலூர் ஆர்.கே.ஏ.பி. கல்யாண மண்டபத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. வாக்குப் பதிவின்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது மோதலாக மாறியது.
இரு தரப்பும் அடித்துக் கொண்டு உருண்டனர். நாற்காலிகள் பறந்தன. கல்வீச்சும் நடந்தது.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட திருவையாறு போலீஸ் துணை எஸ்.பி. அமிர்தகுமார், காவலர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் மீது ம் கற்கள் வந்து விழுந்தன. இதில் அமிர்தகுமாரின் மண்டை உடைந்தது. ராஜேஷ் கண்ணாவின் தாடை உடைந்தது.
கல்யாண மண்டபத்திற்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த பூண்டி வெங்கடேசனுக்கு சொந்தமான கார் அடித்து நொறுக்கப்பட்டு, தலைகுப்புற கவிழ்க்கப்பட்டது.
திருவையாறு எம்எல்ஏவான துரை சந்திரசேகரன், பூதலூர்- தஞ்சை பிரிவு சாலையில் நின்று கொண்டு தேர்தல் குறித்த தகவல்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது திமுகவின் ஒரு கோஷ்டி ஆயுதங்களுடன் அங்கே சென்றது. அவர்களைப் பார்த்தவுடன் துரை சந்திரசேகரன் தப்பியோடினார். ஒரு வீட்டுக்குள் தஞ்சம் புகுந்தார். இதையடுத்து அந்தக் கும்பல் அவரது காரை அடித்து நொறுக்கி, தீ வைத்தது.
இந்த திமுக கோஷ்டி மோதலால் பூதலூர்-திருக்காட்டுப்பள்ளி சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications