புதுச்சேரி-'காங் தலைமை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி'
புதுச்சேரி: காங்கிரஸ் தலைமையை ஏற்கும் கட்சிகளை எங்கள் கூட்டணியில் வரவேற்போம் என்று புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் மேலிட பிரதிநிதி கே.பி.கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் மேலிட பிரதிநிதி கே.பி.கிருஷ்ணமூர்த்தி இன்று புதுச்சேரிக்கு வருகை தந்தார்.
மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்த அவரை, முதல்வர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் வல்சராஜ், ஷாஜகான், நமச்சிவாயம், கந்தசாமி மற்றும் புதுவை காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் ஆகியோர் வரவேற்றனர்.
அங்கு அவர்களுடன் கிருஷ்ணமூர்த்தி நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.
பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், புதுச்சேரி காங்கிரசில் புதிய நிர்வாகிகளை நியமிப்பது குறித்து ஆலோசனை நடத்தினோம்.
முன்னாள் முதல்வர் ரங்கசாமி கட்சியில் முக்கிய பங்கு வகித்தவர். அதனால் அவரிடமும் ஆலோசனை நடத்தினோம்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு காங்கிரஸ் தயாராக உள்ளது.
காங்கிரஸ் தலைமை ஏற்று எங்களுடன் கூட்டணி சேரும் கட்சிகளை நாங்கள் வரவேற்போம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications