மருது சகோதரர்கள் பேனர் கிழிப்பு-மதுரையில் பதற்றம்!
மதுரை: மருது சகோதர்களுக்கு வைத்திருந்த பேனரை கிழித்ததாக கூறி 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை விடுதலை செய்யக்கோரி மதுரையில் ஒரு சமூகத்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பதற்றமாக காணப்படுகிறது.
மதுரை பைகாரா தெருவை சேர்ந்தவர் ஆனந்த்.இவர் மருது சகோதர்கள் பிறந்த தினத்தை முன்னிட்டு மதுரையில் சில இடங்களில் பேனர் வைத்திருந்தார்.
இந்த பேனரை சில விஷமிகள் இரவோடு இரவாக கிழித்துள்ளனர்.
இது குறித்து ஆனந்த் மதுரை ஆண்டாள்புரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் பைகாரா நகரை சேர்ந்த அறிவழகன், தென்றல் சிவா, ரவி உள்பட 6 பேரைக் கைது செய்தனர்.
அவர்கள் கைதுக்கு எதிர்த்து தெரிவித்த அவர்களது உறவினர்கள் இன்று காலை பைகாரா ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் மதுரை - திருப்ரங்குன்றம் சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த மதுரை போலீஸ் கமிஷனர் நந்தபாலன், துணை கமிஷனர் ராமராஜன், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமுக தீர்வு எட்டவில்லை.
மறியல் காரணமாக அப் பகுதியில் உள்ள கடைகள், ஓட்டல்கள் போன்றவைகள் அடைக்கப்படிருந்தன. சில பள்ளிகள் குழந்தைகளை அவசர அவசரமாக வீட்டிற்கு அனுப்பியது.
நிலமை கட்டுப்பாட்டை மீறி செல்வதை உணர்ந்த போலீசார் கைது செய்யப்பட்ட 6 பேரை விடுவித்தனர். இதனால் சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்த சம்பவம் காரணமாக மதுரையில் பதட்டம் காணப்பட்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications