பள்ளி கட்டடம் இடிந்தது-15 குழந்தைகள் தப்பினர்
சீர்காழி: சீர்காழி அருகே உள்ள கோணயாம்பட்டியில் தரமற்ற பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக 15 பள்ளி குழந்தைகள் உயிர் பிழைத்தனர்.
சீர்காழி அருகே உள்ளது கோணயாம்பட்டி. இங்கு கருணாலயா என்ற மழலையர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 15 குழந்தைகள் படித்து வருகின்றனர்.
நேற்று, வழக்கம் போல் பள்ளி இயங்கி வந்த போது பள்ளியின் மேற்கூறை திடீரென இடிந்து விழுந்தது.
அப்போது பள்ளியில் உள்ள குழந்தைகள், வெளியே விளையாட சென்றதால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் பிழைத்தனர்.
கட்டிடம் இடிந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து குழந்தைகள் இடிந்த பகுதிக்குள் செல்லாமல் தடுத்தனர்.
தரமற்ற கட்டிடங்களை பள்ளிகளாக இயங்க அனுமதித்த அரசு அதிகாரிகள் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப் பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications