சபரிமலைக்கு 210 சிறப்பு ரயில்கள்
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி நாடு முழுதிலுமிருந்து 210 சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
சபரி மலை சீசன் 16ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சபரிமலையில் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிவார்கள். அவர்களின் வசதிக்காக மும்பை, சென்னை உட்பட முக்கிய நகரங்களில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு சபரிமலைக்கு சிறப்பு ரயில் இயக்குவது குறித்த ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரத்தில் கேரள தேவசம் போர்டு அமைச்சர் சுதாகரன் தலைமையில் நேற்று நடந்தது. தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். இந்த சீசனில் சபரிமலைக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 210 சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டது.
அரவணை டோக்கன் ரூ.50!:
நடை திறக்க இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் பக்தர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்யும் முயற்சியில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு இறங்கியுள்ளது.
கடந்த வருடம் அரவணை பிரசாத விநியோகத்தில் ஏற்பட்ட குளறுபடி மீண்டும் நிகழாமல் தடுக்க, இந்த ஆண்டு முதல் நாடு முழுவதும் உள்ள தனலட்சுமி வங்கி கிளைகளில் அரவணை பிரசாத கூப்பன்கள் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூப்பன்கள் வரும் 7-ந்தேதி முதல் விநியோகம் செய்யப்படும். ரூ.50 செலுத்தி இந்த டோக்கனை வாங்கி, சபரிமலையில் உள்ள கவுண்டர்களில் கொடுத்து பிரசாதம் பெற்றுக் கொள்ளலாம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications