'இலங்கை'-புதுச்சேரியில் மாணவர்கள் பிரமாண்ட ஊர்வலம்
புதுச்சேரி: புதுச்சேரியி்ல் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் இன்று மாபெரும் ஊர்வலம் நடத்தினர்
இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகத்தைப் போலவே புதுவையிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஆளும் காங்கிரஸ் அரசு பல போராட்டங்களுக்கு தடை விதித்தும் பலரை கைது செய்தும் வருகிறது. சமீபத்தில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நடத்திய உண்ணாவிரதத்தில் காங்கிரஸ் கட்சியினர் புகுந்து ரகளயில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பெரும் ரகளையும் அடிதடியும் ஏற்பட்டது. இதையடுத்து மதிமுக, விடுதலைச் சிறுத்தைகளைச் சேர்ந்தவர்கள் மீது காவல்துறை வெளியில் வர முடியாத வகையில் வழக்கு பதிவு செய்து உள்ளே தள்ளியது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியினர் மீது சாதாரண வழக்கு பதியப்பட்டது.
இந் நிலையில் புதுவை மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 5,000 பேர் இன்று திரண்டு கவர்னரிடம் மனு கொடுக்க சென்றனர்.
ஈழத்தமிழ் மக்களின் அவல வாழ்க்கையைச் சித்தரிக்கும் பதாகைகள் ஏந்தி முழக்கங்கள் எழுப்பியபடி கவர்னர் மாளிகை நோக்கி சென்றனர்.
இதில் பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி சேர்ந்த 2,500 மாணவிகளும், தாகூர் கல்லூரி உள்ளிட்ட அரசுக் கல்லூரி, பள்ளி மாணவர்கள் 2,500 பேரும் புதுச்சேரியின் காந்திவீதி வழியாக ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர்.
ஆளுநரிடம் ஈழத் தமிழர்களை மத்திய அரசு காப்பாற்ற வேண்டும் என்று கோரி மனு அளிக்க உள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications