இலங்கை ராணுவத்துக்கு மத்திய அரசு உதவி-ஜெ
சென்னை: இலங்கை ராணுவத்திற்கு மத்திய அரசு அயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் அதி நவீன சாதனங்களை அனுப்பியது உண்மை தானே?, அப்போது திமுக மத்திய அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கைத் தமிழர்களின் மோசமான நிலைமையை நான் முதலில் எழுப்பியதையடுத்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டினார் கருணாநிதி. ஆனால், நிறைவேற்றப்பட்ட சில தீர்மானங்கள் குறுகிய காலத்திலேயே மீறப்பட்டுவிட்டன.
தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், ராமேஸ்வரத்தில் முக்கிய திரைப்பட பிரமுகர்களின் கூட்டத்திற்கும், சென்னையில் மனித சங்கிலி போராட்டத் ற்கும் ஏற்பாடு செய்தார் கருணாநிதி. பின்னர், நீண்ட காலமாக பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதற்காக நிதி திரட்டப்படும் என்று அறிவித்தார்.
இது போன்ற அவசரமான நடவடிக்கைகளுக்கு இடையில், என்னால் எழுப்பப்பட்ட சில அடிப்படை கேள்விகளுக்கு இன்னும் பதிலளிக்கப்படாமல் உள்ளன.
மத்திய அரசு அயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் அதி நவீன சாதனங்களை இலங்கை ராணுவத்திற்கு அனுப்பியது உண்மை தானே?
தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்துவதற்கான சாதனங்களைப் பொருத்துவதற்காக இந்திய விஞ்ஞானிகளும், தொழில்நுட்ப வல்லுநர்களும் மத்திய அரசால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட போது, திமுக மத்திய அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
இலங்கையில் உள்ள தங்களது சகோதர, சகோதரிகள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து தமிழக மக்கள் உண்மையான கவலை கொண்டுள்ள நிலையில், வசூலித்த பணத்தை வைத்துக் கொண்டு கருணாநிதி என்ன செய்யப் போகிறார்?
இலங்கை அரசிடம் அளிக்கப் போகிறாரா? என்று கேட்டுள்ளார் ஜெயலலிதா.
-
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications