8000 விமான ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்

புதிய விமான நிலைய நிர்வாகக் கொள்கையின்படி இந்தியன் ஏர்லைன்ஸ் சம்மேளனத்தில் இடம்பெற்றுள்ள விமான நிறுவனங்களின் மொத்த விமான நிலையப் பணியாளர்கள் 28,000 பேரில் உடனடியாக 8,000 பேரை பணிநீக்கம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
விமான நிலைய நிர்வாகத்தின் புதிய கொள்கையின்படி இனி தனியார் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையப் பணிகளில் அனுமதிக்கப் படமாட்டார்கள்.
ஏர் இந்தியா மற்றும் விமான நிலைய நிர்வாகத்தினர் மட்டுமே பணியில் ஈடுபடுவார்கள். இவர்கள் மூலம்தான் தனியார் விமான ஆபரேட்டர்கள் இனி தங்கள் சேவைகளை கையாள வேண்டி வரும்.
தற்போது இந்தியா முழுவதிலுமுள்ள பல்வேறு விமான நிலையங்களில் ஜெட் ஏர்வேஸ் சார்பில் 4,000 பேரும், ஸ்பைஸ்ஜெட் மற்றும் இண்டிகோவில் முறையே 1,800 பேரும் மற்றும் 2000 பணியாளர்களும் உள்ளனர். கோ ஏரில் 350 பேர் உள்ளனர்.
புதிய விமான நிலையக் கொள்கையை நடைமுறைப்படுத்தினால் இவர்கள் அனைவரும் வேலை இழப்பார்கள்.
ஆனால் இதற்கு தனியார் விமான நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஆனாலும் வேறு வழியின்றி, திட்டமிட்டபடி 8000 பணியாளர்களை படிப்படியாக வேலை நீக்கம் செய்யும் முடிவில் உறுதியாக இருப்பதாக இந்திய ஏர்லைன்ஸ் சம்மேளனம் அறிவித்துள்ளது. ஜனவரி 1ம் தேதி முதல் பணியாளர் குறைப்பு அமலுக்கு வரும் என்கிறார்கள்.
ஆனாலும் இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய முடியுமா என்றும் விமானப் போக்குவரத்துத் துறை யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications