'ஒபாமா': பீதியில் ஐடி, கால்சென்டர், பிபிஓ நிறுவனங்கள்

அமெரிக்காவில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் நிறுவனங்களுக்கு வரி சலுகையும், அவுட்சோர்சிங் செய்து வேலைவாய்ப்புகளை வெளிநாடுகளுக்குத் தள்ளும் அமெரிக்க நிறுவனங்களுக்கு கூடுதல் வரியும் விதிக்கப்படும் என ஒபாமா தனது தேர்தல் பிரச்சாரத்தில் உறுதியளித்துள்ளார்.
இந் நிலையில் அவர் வெற்றியும் பெற்றுவிட்டதால் இந்திய பிபிஓ மற்றும் கால்சென்டர் நிறுவனங்களிடையே பீதி பரவியுள்ளது.
இது குறித்து சிதம்பரம் கூறுகையி்ல்,
வரும் காலத்தில் இந்திய-அமெரிக்க உறவு, குறிப்பாக வர்த்தக உறவு மேலும் வலுப்படும் என்பதே என் நம்பிக்கை. அவுட்சோர்சிங் குறித்த அவரது கமெண்ட் குறித்து அதிகமாக கவலைப்படத் தேவையி்ல்லை.
அவர் பதவியில் அமர்ந்த பின்னரே அவருக்கு இந்த விவகாரம் எல்லாம் புரியும். பொருளாதாரரீதியில் ஒன்றுடன் ஒன்று வலைபோல பிணைந்துவிட்ட தேசங்கள் கொண்ட இந்த உலகில் எந்த நாடு தனித்து எதையும் செய்துவிட முடியாது.
இதை அவர் பதவிக்கு வந்தவுடன் புரிந்து கொள்வார். இதனால் நாம் இதை நினைத்து அஞ்ச வேண்டியதில்லை என்றார்.
ஐடி பங்குகளில் வீழ்ச்சி:
ஆனாலும் ஒபாமா வென்றார் என்ற தகவல் வந்தவுடனேயே இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களின் பங்குகளில் வீழ்ச்சி ஏற்பட்டுவிட்டது. பொதுவாக பங்குச் சந்தையில் ஏறுமுகம் இருந்த நிலையில் சாப்ட்வேர் நிறுவன பங்குகள் ஆட்டம் கண்டன.
குறிப்பாக இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ, சத்யம் டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவன பங்குகள் விலை சரிந்தன.
அவுட்சோர்சிங்கில் ஒபாமா கை வைத்தால் இந்த நிறுவனங்கள் உள்ள்ட்ட ஐடி நிறுவனங்களுக்கு வரும் ஆர்டர்கள் குறையலாம் என்ற அச்சம் காரணமாக பங்குகள் விலை குறைந்தன.
இதே போன்ற அச்சம் சீன நிறுவனங்களிடமும் பரவியுள்ளது. சீனா தனது கரன்சியில் மதிப்பை அதிகரிக்காமல் இருந்து வருகிறது. இதனால் அமெரிக்காவுடன் டாலரில் நடக்கும் வர்த்தகத்தில் அந்த நாடு பெரும் லாபம் அடைந்து வருகிறது. இதை ஒபாமா தடு்க்கலாம் எனத் தெரிகிறது. கரன்சியின் மதிப்பை அதிகரிக்குமாறு சீனாவை ஒபாமா நெருக்கலாம் என்கிறார்கள்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications