கூட்டணியை காக்க காங் எம்பி-எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து
சென்னை: சென்னையில் இன்று நடைபெறுவதாக இருந்த காங்கிரஸ் மத்திய அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆட்சியில் பங்கு வேண்டும் கேட்டு திமுகவுக்கு நெருக்குதல் தர வேண்டும் என பல காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குரல் எழுப்பலாம் எனத் தெரியவந்ததையடுத்து கட்சித் தலைமை இந்தக் கூட்டத்தை கடைசி நேரத்தில் ரத்து செய்விட்டதாகத் தெரிகிறது.
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் வரும் 10ம் தேதி கூடுகிறது. வழக்கமாக கூட்டத் தொடர் நடக்கும் அதே நாள் காலையில் தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் சம்பிரதாயத்துக்காக நடக்கும்.
ஆனால், இந்தமுறை இன்றே கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதில் எம்எல்ஏக்கள் மட்டுமின்றி எம்பிக்களும் பங்கேற்பர் என அறிவிக்கப்பட்டது.
இவர்கள் புலிகள், இலங்கை விவகாரம் மற்றும் ஆட்சியில் பங்கு கேட்டு ஏடாகூடமாக ஏதாவது தீர்மானம் போடலாம் எனத் தெரியவந்ததையடுத்து இந்தக் கூட்டத்தில் கட்சியின் மத்திய பார்வையாளர்களும் தமிழகத்தைச் சேர்ந்த 4 காங்கிரஸ் மத்திய அமைச்சர்களும் பங்கேற்பர் என டெல்லி தலைமை அறிவித்தது.
இந் நிலையில் திடீரென கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் எம்எல்ஏக்கள் திமுகவுக்கு எதிராக காரசாரமாகப் பேசினால், அது சட்டமன்றத்திலும் எதிரொலித்து கூட்டணிக்கு உலை வைக்கும் என தெரியவந்ததால் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
கூட்டம் வேறு தேதியில் நடக்கும் என தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு அறிவித்துள்ளார்.
முன்னதாக தீவிர திமுக எதிர்ப்பாளரான காங்கிரஸ் மத்திய பார்வையாளர் அருண்குமார் நேற்று டெல்லியில், திமுகவுடன் கூட்டணி தொடரும் என்ற தலைமையின் கருத்தை வெளியிட்டது நினைவுகூறத்தக்கது.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications