முதல்வர் வீட்டுக்கு பூச்சி மருந்துடன் வந்த பெண் - பரபரப்பு
சென்னை: முதல்வர் கருணாநிதியை சந்தித்து மனு கொடுக்க வந்திருப்பதாக கூறிய பெண், மூட்டைப் பூச்சி மருந்தை கையில் வைத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள முதல்வரின் வீட்டிற்கு செல்வதற்காக பிரேமா (34) என்ற பெண் இன்று காலை வந்தார். அவரை நிறுத்திய போலீஸார், யார், என்ன என்று விவரம் கேட்டனர்.
அப்போது, முதல்வரை சந்தித்து மனு கொடுக்கவிருப்பதாக அந்த பெண் கூறினார். ஆனால் அவரிடம் மனு எதுவும் இல்லை. இதையடுத்து அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனையிட்டனர். அதில் மூட்டைபூச்சி மருந்து மட்டுமே இருந்தது.
இதனால் முதல்வர் வீட்டுக்கு முன்பு தற்கொலைக்கு முயற்சிக்கும் திட்டத்துடன் அவர் வந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர்.
இதையடுத்து போலீசார் அவரை ராயப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, தனது கணவர் வெற்றிவேல் வெளிநாடு செல்ல கடன் வாங்கி கொடுத்ததாகவும், வெளிநாடு சென்ற பிறகு தன்னை மறந்து விட்டார். மாமியார் வீட்டிலும் சேர்த்துக் கொள்ளாமல் விரட்டியடித்து விட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
முதல்வரிடம் இது குறித்து முறையிட்டு தனக்கு உதவி அளிக்கும்படி கேட்டு கொள்ளவே முதல்வரை சந்திக்க சென்றதாகவும் அந்த பெண் கூறியிருக்கிறார்.
ஆனால் பூச்சி மருந்துடன் வந்ததால் அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தப் பெண்ணால் முதல்வர் வீடு அருகே பரபரப்பு ஏற்பட்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications