இலங்கை ராணுவத்திற்கு 1.6 பில்லியன் ஒதுக்கீடு

Subscribe to Oneindia Tamil

Lankan Army
கொழும்பு: இலங்கை அரசு தனது பாதுகாப்புத்துறை பட்ஜெட்டை 7 சதவீதம் உயர்த்தியுள்ளது. பாதுகாப்புத்துறைக்கு 1.6 பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ராணுவம் தீவிரமாக உள்ள நிலையில், பாதுகாப்புத்துறை நிதி ஒதுக்கீட்டை அரசு உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

2009ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து அதிபர் ராஜபக்சே இன்று பேசுகையில், 2009ஆண்டுக்கான பாதுகாப்புத்துறை பட்ஜெட் 1.6 பில்லியனாக இருக்கும். இது நடப்பு பட்ஜெட்டை விட 7 சதவீதம் அதிகமாகும்.

தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், மறு வாழ்வு நடவடிக்கை செலவுகளுக்காகவும் அனைத்துப் பொருட்கள் மற்றும் சேவை மீது கூடுதலாக ஒரு சதவீத வரி விதிக்கப்படும்.

ராணுவத்துடன் மோதிக் கொண்டிருக்கும் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு ஜனநாயகப் பாதைக்குத் திரும்ப வேண்டும். இந்த கடைசி நிமிடத்திலும் கூட அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க விரும்புகிறோம். இல்லாவிட்டால் அவர்கள் ராணுவ ரீதியாக தோற்கடிக்கப்படுவார்கள்.

புலிகளின் ஆதிக்கத்திலிருந்து வடக்கை ராணுவம் வேகமாக மீட்டு வருகிறது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளை ராணுவம் மீட்டு விட்டது.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது சந்தோஷம் தருகிறது. நமது நம்பிக்கைகள் வேகமான முன்னேற்றத்தைக் கண்டு வருகின்றன என்றார் அவர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+