தூத்துக்குடியில் 4 இலங்கைத் தமிழர்கள் கைது - ஒருவர் புலி?
தூத்துக்குடி: தூத்துக்குடியில், இலங்கையைச் சேர்ந்த நான்கு பேர் உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர் விடுதலைப் புலியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், அந்த நாட்டு ராணுவத்திற்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது.
இந்த நிலையில் தூத்துக்குடி கடலோர காவல்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தருவைகுளம் கல்மேடு அருகே உள்ள கடல் பகுதியில் படகில் பெருட்களை எற்றிக் கொண்டிருந்தனர்.
அவர்களை போலீசார் சுற்றி வளைத்து சோதனை செய்த போது அவர்களிடமிருந்து 50 மினி லாரி டியூப்கள், 4கார் பேட்டரிகள், 4 கேன் டீசல், 35 லிட்டர் அமிலம் போன்றவைகளை கைப்பற்றினர்.
போலீசார் விசாரணையில் அவைகள் இலங்கைக்கு கடத்தி கொண்டு செல்ல இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ 10 லட்சம் என கூறப்படுகிறது.
கடத்தலில் ஈடுபட்ட யாழ்பாணத்தைச் சேர்ந்த பாலா(46), அந்தோணி ஜெனிபர் (40), மேக வண்ணன்(42), கனகரத்தினம்(35), மதுரை தோப்பூரை சேர்ந்த தங்க பாண்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதில் பாலா விடுதலைப்புலி இயக்கத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications