தூத்துக்குடி-கார் விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி!
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே சாலை விபத்தில் இரு குழந்தைகள் உட்பட 4 பேர் பலியாயினர்.
தூத்துக்குடி மில்லர்புரத்தைச் சேர்ந்த கந்தவேல், ஹாங்காங் செல்ல இருந்தார். இவரை வழியனுப்ப கந்தவேலுவின் மனைவி சுதாலட்சுமி (31), மகள்கள் சோனலட்சுமி (5), காவியா நிவாசினி (3) மற்றும் அவரது அத்தை பிரேமா (53) அவரது மாமா முத்துக்குமாரசாமி (67) ஆகியோர் 5 பேரும் டாக்ஸியில் திருவனந்தபுரம் கிளம்பினர்.
திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்தபோது புதுக்கோட்டை அருகில் உள்ள மங்களகிரி விலக்கு அருகே எதிரே வந்த டேங்கர் லாரி, கார் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் சோனலட்சுமி, காவியா நிவாசினி ஆகிய 2 குழந்தைகள் சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியானார்கள்.
பிரேமா, டாக்சி ஓட்டுனர் பாலா ஆகியோர் மருத்துவ மனையில் சிகிச்சையளித்தும் பலனின்றி இறந்தனர்.
மேலும் மூன்று பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications