பாதியில் முடிந்த இலவச டிவி வழங்கும் விழா
நெல்லை: நெல்லை மாவட்டம் வள்ளியூர் யூனியன் இருக்கன்துறை பஞ்சாயத்து சங்கநேரியில் புதிய சமுதாய நலக்கூடம் திறப்பு, மற்றும் தமிழக அரசின் இலவச கலர் டிவி வழங்கும் விழா நடந்தது.
சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமை வகித்து சமுதாய நலக் கூடத்தை திறந்து வைத்தார். வருவாய் துறை மூலம் தேர்வு செய்யப்பட்ட 974 பேருக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் ராதிகா செல்வி, சபாநாயகர் ஆவுடையப்பன் ஆகி்யோர் இலவச கலர் டிவிக்களை வழங்கினர்.
அப்போது திடீரென கிராம மக்கள் தொலைக்காட்சி பெட்டி வழங்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து மேடையை சூழ்ந்து கொண்டனர்.
இருக்கன்துறை பஞ்சாயத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொலைக்காட்சி பெட்டி வழங்குவதில் பராபட்சத்துடன் நடந்து கொண்டதாகவும், 246 பேருக்கு தொலைக்காட்சி பெட்டிக்கான டோக்கன் வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.
மேலும் கிராமத்தை சேர்ந்த அனைவருக்கும் தொலைக்காட்சி பெட்டி வழங்க வேண்டும். இல்லாத பட்சத்தில் ஒருவருக்கும் வழங்க கூடாது என்று பெண்களும், ஆண்களும் மத்திய அமைச்சர் ராதிகா செல்வி, சபாநாயகர் ஆவுடையப்பன், அப்பாவு எம்எல்ஏ ஆகியோரை முற்றுகையிட்டனர்.
இதனால் மேடையில் ஒரே கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து விழாவை பாதியிலேயே முடித்துக் கொண்டு விஐபிக்கள் கிளம்பினர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications