கும்பகோணம் தீ-நினைவுச் சின்னம் திறப்பு

கும்பகோணத்தில் கடந்த 2004ம் ஆண்டு கிருஷ்ணா பள்ளிக்கூடத்தில் கோர தீவிபத்து நடந்தது. இதில் சிக்கி 94 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இவர்களின் நினைவாக நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என அரசுக்கு குழந்தைகளின் பெற்றோர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நினைவுச்சின்னம் அமைக்க பாலக்கரையில் இடமும், ரூ. 60 லட்சம் நிதியையும் அரசு ஒதுக்கியது.
இதையடுத்து பாலக்கரையில் நினைவுச் சின்னம் அமைக்கும் பணி தொடங்கியது.
நினைவுத் தூண், தியான மண்டபம், அலங்கார விளக்குகள், பூங்கா, சுற்றுச்சுவர் ஆகியவை கட்டப்பட்டன. இவற்றின் திறப்பு விழா நேற்று நடந்தது. உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு சின்னத்தைத் திறந்து வைத்தார்.
பின்னர் உள்ளே சென்று பார்வையிட்டார். அங்கிருந்த தியான மண்டபத்தில் இறந்த குழந்தைகளின் பெயர்களுக்கு முன்பு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
நினைவுத் தூணுக்கும் அவர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் குழந்தைகளின் பெற்றோர்களிடம் அவர் சிறிது நேரம் பேசினார். அவரிடம் பெற்றோர்கள் பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர். அவை பரிசீலிக்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications