இலங்கை நிவாரண நிதி: காங்கிரஸ் ரூ. 5 லட்சம் அளித்தது
சென்னை: இலங்கைத் தமிழர் நிவாரண நிதிக்கு தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை அக்கட்சித் தலைவர் தங்கபாலு, முதல்வர் கருணாநிதியிடம் இன்று அளித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு இன்று முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் உடன் இருந்தார்.
சந்திப்பின் போது இலங்கை தமிழர் நிவாரண உதவிக்காக தமிழக அரசு திரட்டி வரும் நிதிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ரூ.5 லட்சத்தை தங்கபாலு முதல்வரிடம் வழங்கினார்.
பின்னர் வீட்டுக்கு வெளியே குழுமியிருந்த செய்தியாளர்களிடம் தங்கபாலு பேசுகையில்,
தமிழக அரசு திரட்டி வரும் நிதி எப்போது இலங்கை சென்று சேரும் என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும். விரைவில் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர் களுக்கு இந்த நிதியுதவி அனுப்பி வைக்கப்படும்.
இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக போடப்பட்ட ராஜீவ்காந்தி- ஜெயவர்த்தனே ஒப்பந்தம் நிறைவேறி இருந்தால் இன்றைக்கு பிரச்சனைகளே இருந்திருக்காது. இது பற்றி வேறொன்றும் நான் சொல்ல விரும்பவில்லை.
நாளை சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்குகிறது. இது தொடர்பாக இன்று மாலை காங்கிரஸ் எம்எல்ஏக் களின் ஆலோசனைக் கூட்டம் நடை பெறவுள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகு உங்களிடம் விரிவாக பேசுகிறேன் என்றார் அவர்.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications