தங்கபாலு கூட்டிய காங். எம்எல்ஏக்கள் கூட்டம்: 10 பேர் புறக்கணிப்பு
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூட்டிய எம்எல்ஏக்கள் கூட்டத்தை 10 பேர் புறக்கணித்தனர்.
தமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியதையொட்டி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்து ஆலோசிக்க சென்னை சத்தியமூர்த்தி பவனில் அக் கட்சி எம்எல்ஏக்களின் கூட்டம்நடந்தது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் ஆகியோர் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தை 10 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் புறக்கணித்துவிட்டனர்.
இதில் திமுகவுக்கு எதிராக தீவிர நிலை எடுத்துள்ள வேலூர் எம்எல்ஏ ஞானசேகரனும் அடங்குவார்.
கடந்த 6ம் தேதி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடப்பதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், அதில் ஆட்சியில் பங்கு, புலிகள் விவகாரம் தொடர்பாக திமுகவுக்கு நெருக்கடி தருவது குறித்து எம்எல்ஏக்கள் பேசலாம் என்பதால் அந்தக் கூட்டத்தை காங்கிரஸ் டெல்லி தலைமை ரத்து செய்தது.
இந் நிலையில் தான் நேற்று எம்எல்ஏக்கள் கூட்டம் கூட்டப்பட்டது. இதையும் 10 பேர் புறக்கணித்து காங்கிரசில் நிலவும் உள்கட்சிப் பூசலை மீண்டும் வெட்டவெளிச்சமாக்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications