மதுரை கலெக்டராக சீதாராமன் பதவியேற்பு!
மதுரை:மதுரை மாவட்ட புதிய கலெக்டராக சீதாராமனும், கரூர் மாவட்ட கலெக்டராக உமா மகேஸ்வரியும் பதவி ஏற்றுக் கொண்டனர்.
மதுரை மாவட்ட கலெக்டராக இருந்த எஸ்.எஸ்.ஜவஹர் டாஸ்மாக் நிறுவன நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டார்.
அவருக்கு பதிலாக மதுரை மாவட்ட புதிய கலெக்டராக டாஸ்மாக் நிறுவன நிர்வாக இயக்குனராக இருந்த சீதாராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மதுரை மாவட்டத்தில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். நிர்வாகம் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.
புதிய வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு தமது பணிகளை அவர் துவக்கினார்.
கரூர் கலெக்டராக உமா மகேஸ்வரி:
அதே போல கரூர் மாவட்ட புதிய கலெக்டராக உமா மகேஸ்வரி பதவி ஏற்றுக் கொண்டார்.
கரூர் மாவட்ட கலெக்டராக செயல்பட்டு வந்த வெங்கடேஷ், சென்னை வணிகவரித்துறை இணை ஆணையராக மாற்றப்பட்டார்.
அவருக்கு பதிலாக திருவள்ளூர் மாவட்டத்தில் சப்-கலெக்டராக பணியாற்றி வந்த உமா மகேஸ்வரி கரூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications