'சீட் விற்பனை'-மார்கரெட் ஆல்வா ராஜினாமா

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரான ஆல்வா அக் கட்சியின் மூத்த தலைவராவார்.
சில மாதங்களுக்கு முன் கர்நாடகத்தில் சட்டப் பேரவை தேர்தல் நடந்தபோது தனது இரு மகன்களுக்கு சீட் கேட்டார். ஆனால், தலைவர்களி்ன் உறவினர்களுக்கு சீட் தருவதில்லை என்று ரூல் பேசிய மாநில காங்கிரஸ் தலைவர்கள் அவர்களுக்கு சீட் தரவில்லை.
இந் நிலையில் சமீபத்தில் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த ஆல்வா, கர்நாடக தேர்தலில் பணத்தை வாங்கிக் கொண்டு சீட்டுகளை தலைவர்கள் விற்றார்கள், மக்கள் ஆதரவு உள்ளவர்கள் ஒதுக்கப்பட்டு பணம் உள்ளவர்களுக்கே சீட்கள் தரப்பட்ட, இதனால் தான் அங்கு காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
மேலும் எனது குடும்பத்தில் யாருக்கும் சீட் கிடையாது என்று சொன்ன கட்சியே இப்போது 5 மாநிலங்களில் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் பல தலைவர்களின் மகன், மகள், உறவினர்களுக்கு சீட் தந்துள்ளது என குற்றம் சாட்டினார்.
என் மகனுக்கும் மூத்த தலைவர் ஜாபர் ஷெரீப்பின் மகனுக்கும் சீட் தராதது ஏன்?. அவர்கள் என்ன தேச விரோதிகளா என்று கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து ஆல்வா மீது நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு சோனியா காந்தி உத்தரவிட்டார். பாதுகாப்பு அமைச்சர் ஆண்டனி தலைமையிலான அந்தக் குழுவின் முன் ஆஜரான ஆல்வா, தனது நிலையை விளக்கிவிட்டு நேராக சோனியா காந்தியை சந்தித்தார்.
அப்போதே தனது ராஜினாமா கடிதத்தை சோனியாவிடம் அவர் தந்துவிட்டதாகத் தெரிகிறது. ஆனால், ராஜினாமாவை சோனியா ஏற்றாரா இல்லையா என்று தெரியவில்லை.
சமீபத்தில் கர்நாடக காங்கிரஸ் தலைவராக தேஷ்பாண்டே நியமிக்கப்பட்டார். இதை ஆல்வா விரும்பவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்தே அவர் கட்சித் தலைமையுடன் மோதலை ஆரம்பித்தார் என்கிறார்கள்.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications