போலி விசா: 3 சரவண பவன் ஊழியர்களுக்கு வலைவீச்சு
சென்னை: போலி விசா மூலம் அமெரிக்கா செல்ல தயாராக இருந்த சரவண பவன் ஊழியர்கள் 3 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களைப் பிடிக்க தனிப்படை போலீஸார் சிவகங்கை, தேனி, பெரம்பலூர் விரைந்துள்ளனர்.
அமெரிக்காவுக்கு போலி ஆவணங்கள் மூலம் ஆட்களைக் கடத்தியதாக சரவண பவன் ராஜகோபாலின் மகன் சிவக்குமார் மற்றும் ஊழியர் ராமு ஆகியோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிவக்குமார் நான்கு பேரை இவ்வாறு போலி விசாக்கள் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பியிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சிவக்குமார் மூலம் போலி விசாக்கள் பெற்று அமெரிக்கா செல்ல தயாராக இருந்த சரவண பவன் ஊழியர்கள் சேகர், சுப்ரமணி, ஆசைத்தம்பி ஆகியோர் தலைமறைவாகி விட்டனர்.
அவர்கள் தேனி, சிவகங்கை, பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களைப் பிடிக்க தனிப்படைகள் அங்கு விரைந்துள்ளன.
இதற்கிடையே, சிவக்குமாரை காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸார் தீர்மானித்துள்ளனர். மேலும் அமெரிக்கா மற்றும் வெளிநாடுகளில் உள்ள சரவண பவன் கிளைகளில் பணியாற்றும் ஊழியர்கள் குறித்த விவரத்தையும் போலீஸார் சேகரிக்கவுள்ளனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications