ஆள் கடத்தல்: சரவண பவன் சிவக்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை: அமெரிக்காவுக்கு போலி விசா மூலம் ஆட்களை கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள சரவண பவன் நிர்வாக இயக்குநர் சிவக்குமாரின் ஜாமீன் மனுவை சென்னை எழும்பூர் 2வது பெருநகர நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அமெரிக்காவுக்கு போலி விசா மூலம் ராமு என்பவரை அனுப்ப முயன்றதாக கூறி சிவக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நான்கு பேரை இதற்கு முன்பு இப்படி அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ளதாக சிபிசிஐடி போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சிவக்குமாரும், ராமுவும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஜாமீன் கோரி எழும்பூர் 2வது பெருநகர நீதிமன்றத்தில் சிவக்குமார் மனு தாக்கல் செய்தார்.
அப்போது போலீஸ் தரப்பில், விசாரணை இன்னும் ஆரம்ப கட்ட நிலையில்தான் உள்ளது. பல முக்கிய ஆவணங்கள், டிவிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த டிவிடிக்களில் சிவக்குமார் செய்த தவறுகள் குறித்த பல முக்கிய ஆவணங்கள் இருக்கும் என சந்தேகிக்கிறோம்.
இந்த ஆவணங்களையும் டிவிடிக்களையும் விரிவாக ஆராய வேண்டியுள்ளது. இந்த சமயத்தில் சிவக்குமாரை ஜாமீனில் விடுவித்தால் அது விசாரணையை பாதிக்கும். எனவே அவருக்கு ஜாமீன் தரக் கூடாது என்று கோரினர்.
இதையடுத்து சிவக்குமாரின் ஜாமீன் கோரிக்கையை நீதிபதி நிராகரித்து உத்தரவிட்டார். மேலும், சிறையில், ஏ கிளாஸ் வசதி கேட்டு சிவக்குமார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications