சட்டக் கல்லூரி கலவரம் எதிரொலி: கமிஷனர் சேகர் மாற்றம்
சென்னை: சென்னை சட்டக் கல்லூரியில் நடந்த பெரும் வன்முறையின் எதிரொலியாக மாநகர காவல்துறை ஆணையர் சேகர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் நேற்று பெரும் வன்முறை வெடித்தது. மாணவர்களுக்குள் நடந்த மோதலில் 3 மாணவர்களை, ஒரு தரப்பு மாணவர்கள் வெறித்தனமாக தாக்கினர். இதில் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் கல்லூரியின் நுழைவாயிலில் நடந்து கொண்டிருந்தபோது கல்லூரிக்கு வெளியே நின்று கொண்டிருந்த போலீஸார் அதைத் தடுக்க முயலாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
போலீஸாரின் இந்த செயல் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு கட்சிகளும் போலீஸாரின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்த உதவி ஆணையர் உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த நிலையி்ல் இன்று மாலை மாநகர காவல்துறை ஆணையர் சேகர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார். புதிய ஆணையராக கே.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications