ஜனவரி முதல் விமானக் கட்டணம் மேலும் குறையும்!
மும்பை: கச்சா எண்ணெய் விலை அதல பாதாளத்தைத் தொட்டாலும், விட்டதையெல்லாம் சம்பாதிக்கும் வரை பெட்ரோல் விலையைக் குறைக்க மாட்டோம் என ஒரு பக்கம் பெட்ரோலியத் துறை அடம் பிடிக்க, விமானப் பயணிகளுக்கு நற்செய்தி தெரிவித்துள்ளார் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரபுல் பட்டேல்.
அடுத்த ஜனவரியிலிருந்து விமானக் கட்டணங்கள் குறையும் என்று அறிவித்துள்ளார் அவர்.
விமானக் கட்டண உயர்வைக் கட்டுப்படுத்தவும், தனியார் விமானங்களின் நஷ்டத்தைக் குறைக்கவும் சமீபத்தில் ரூ.3000 கோடி வரையிலான பல சலுகைகளை அறிவித்தது மத்திய அரசு.
இதன் விளைவாக சர்வதேச விமானக் கட்டணத்தில் 1200 முதல் 10000 ரூபாய் வரை குறைந்தது. அதே போல உள்ளூர் விமான டிக்கெட்டுகளுக்கும் 350 முதல் 500 ரூபாய் வரை குறைக்கப்பட்டது.
இந்நிலையில் விமான எரி பொருட்களுக்கான விலை மேலும் குறைக்கப்பட உள்ளது. இதனால் வரும் ஜனவரி முதல் விமானக் கட்டணம் மேலும் 20 சதவிகிதம் வரை குறையக்கூடும் என பிரபுல் பட்டேல் குறிப்பிட்டுள்ளார்.
இன்னொரு பக்கம், பண்டிகைக் காலமான நவம்பர்- டிசம்பர் மாதங்களில் விமானப் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் அதிகம். அதனால் இப்போது சற்றே குறப்பது போல பாவனை காட்டும் விமான நிறுவனங்கள், பயணிகள் வருகை மிகக் குறைவாக உள்ள ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் விமானக் கட்டணத்தைக் குறைத்து அதிக பயணிகளை ஈர்க்க முடிவெடுத்துள்ளன.
இது வழக்கமாக நடக்கும் 'விளையாட்டு'தான். ஆனால் பிரபுல் பட்டேல் புதிதாக இதற்கு வர்ணம் பூசப் பார்க்கிறார் என எதிர்கட்சிகள் தெரிவித்துள்ளன.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications