கவலையுடன் கூடும் ஜி-20: சோகத்துடன் பிரதமர் பயணம்

Subscribe to Oneindia Tamil

Manmohan Singh
டெல்லி: உலக பொருளாதார நெருக்கடி குறித்து வாஷிங்டனில் நாளை நடக்கவுள்ள ஜி-20 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்கா சென்றார். அவருடன் நிதியமைச்சர் ப.சிதம்பரம், திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா ஆகியோரும் சென்றுள்ளனர்.

அமெரிக்காவில் ஆரம்பித்த பொருளாதார நெருக்கடி ஐரோப்பா, ஆசியா என பரவி வருகிறது. உலகெங்கும் ஏற்றுமதிகளும் உற்பத்திகளும் குறைந்து, வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. தொழில்கள் மூடப்பட்டு வரும் நிலையில் இந்த சிக்கலை சமாளிப்பது குறித்து விவாதிக்க அமெரிக்க அதிபர் புஷ் அவசரமாக ஜி-20 நாட்டுத் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.

இதில் பங்கேற்கச் செல்லும் முன் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்ட அறிக்கையில்,

இந்த பொருளாதார சிக்கல் மேலும் பல நாடுகளுக்கும் பல மட்டங்களுக்கும் பரவி வருகிறது. இதற்கு எந்த நாடும் தப்ப முடியாது. நாமும் சிக்கலில் மாட்டியிருக்கிறோம். ஜி-20 மாநாட்டில் இந்த சிக்கலுக்கான காரணங்கள், அதை சமாளிப்பது குறித்து விவாதிப்போம்.

உலக பொருளாதாரத்தோடு இந்தியா பின்னிப் பிணைந்துவிட்ட நிலையில் இந்த சிக்கலுக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு நமக்கும் உண்டு. இந்த விஷயதத்தில் இந்தியாவின் கருத்தை நான் எடுத்து வைப்பேன். உள்நாட்டு தொழில்துறையை பாதுகாக்கிறோம், வேலைவாய்ப்புகளை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் வளரும் நாடுகளின் வளர்ச்சியை வளர்ந்த நாடுகள் கேள்விக்குறியாக்கிவிடக் கூடாது என்பது எடுத்துச் சொல்வேன் (இது அவுட்சோர்சிங்கை எதிர்க்கும் ஒபாமாவின் நிலைக்கு பிரதமர் மறைமுகமாக காட்டும் எதிர்ப்பு).

நமது பொருளாதாரத்தின் அடிப்படை பலமாகவே உள்ளது. சந்தையில் நிதி தட்டுப்பாட்டை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது என்று கூறியுள்ளார் பிரதமர்.

ஜி-20 அமைப்பில் இந்தியா தவிர அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், ஜெர்மனி, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசி்ல், சீனா, இந்தோனேஷியா, மெக்ஸிகோ, ரஷ்யா, செளதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி ஆகிய நாடுகளும் 27 ஐரோப்பிய யூனியன் நாடுகளின் சார்பில் பிரான்சும் இடம் பெற்றுள்ளன.

ஒபாமா பங்கேற்கவில்லை:

முன்னதாக இந்த மாட்டில் பராக் ஒபாமாவும் பங்கேற்பார் என்று கூறப்பட்டது. ஆனால், அதை ஒபாமா தவிர்த்துவிட்டார். அதிபராக புஷ் பங்கேற்கும் நிலையில், போட்டியாக தானும் இதில் போய் அமர விரும்பவில்லை என்று கூறிவிட்டார்.

மேலும் இந்த மாநாட்டுக்கு வரும் பல்வேறு நாட்டுத் தலைவர்களும் ஒபாமாவை சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் கேட்டுள்ளனர். இதில் யாரை அவர் சந்திப்பார் என்று தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+