சென்னையைத் தொடர்ந்து மதுரையிலும் பஸ் எரிப்பு
மதுரை: சென்னையைத் தொடர்ந்து மதுரையிலும் நேற்று அரசு பஸ் தீவைத்து எரிக்கப்பட்டது.
சென்னை சட்டக் கல்லூரி கலவரத்தைத் தொடர்ந்து நேற்று அதிகாலையில், சென்னை அருகே அரசு பஸ் தடுத்து நிறுத்தப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்டது.
இந்த நிலையில், மதுரையிலும் நேற்று நள்ளிரவில் அரசுப் பேருந்து தீவைத்து எரிக்கப்பட்டது. ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு நேற்று நள்ளிரவில் வந்த ஒரு கும்பல் அங்கு நின்றிருந்த கோவை செல்லும் அரசுப் பேருந்துக்கு தீவைத்து விட்டு ஓடியது.
இதையடுத்து பேருந்தில் இருந்த டிரைவர், கண்டக்டர், பயணிகள் அலறியடித்து கீழே இறங்கினர். தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் பஸ் முழுக்க எரிந்து போய் விட்டது.
பஸ்சில் பயணிகள் குறைவான அளவில் இருந்ததால் அனைவரும் வேகமாக கீழே இறங்க முடிந்தது. இல்லாவிட்டால் பெரும் உயி்ர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும்.
கல்வீச்சு - பஸ்கள் சேதம்
இதேபோல வில்லாபுரம், கரிமேடு, உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கல்வச்சில் இறங்கின். இதில் 10 பேருந்துகள் சேதமடைந்தன.


Click it and Unblock the Notifications
