சட்டக் கல்லூரி மோதல்-பகுஜன் கவுன்சிலரிடம் விசாரணை

சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் ஒரு பிரிவு மாணவர்கள் இன்னொரு பிரிவு மாணவர்கள் மீது நடத்திய பயங்கர தாக்குதலில் ஆறுமுகம், பாரதி கண்ணன், அய்யாத்துரை ஆகியோர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்த மாணவர்கள் தரப்பினர் இந்தத் தாக்குதலின் பின்னணியில் பகுஜன் சமாஜ் கட்சியின் கவுன்சிலர் ஆம்ஸ்ட்ராங் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையடுத்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரான ஆம்ஸ்ட்ராங்கிடம் போலீசார் நேற்றிரவு விசாரணை நடத்தினர்.
எஸ்பிளனேடு காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு அவரிடம் விசாரணை நடந்தது. இதுபற்றி தகவல் பரவியதும் பகுஜன் சமாஜ் கட்சியினர் காவல் நிலையம் முன் திரண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அவர் அனுப்பப்பட்டார். தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களுக்கு அவர் உதவியதாகவும் அடைக்கலம் கொடுத்தாகவும் புகார் கூறப்படுவதால் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கவுள்ளது. புகார் உறுதியானால் அவர் கைதாகலாம் என்றும் தெரிகிறது.
கடந்த மாநகராட்சித் தேர்தலின்போது வட சென்னை பகுதியில் திமுகவினர் நடத்திய பெரும் கலவரத்தையும் மீறி சுயேச்சையாக வென்றவர் ஆர்ம்ஸ்ட்ராங் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அவரு உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி முன்னிலையில் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்தார்.
மண்டையில் கீறல்-மாணவருக்கு இன்று ஆபரேசன்:
இதற்கிடைய தாக்குதலில் காயமடைந்த ஆறுமுகம், பாரதி கண்ணன், அய்யாத்துரை ஆகியோர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆறுமுகத்தின் மீது நடந்த உருட்டுக் கட்டை தாக்குதலில் அவரது மண்டையில் கீறல் விழுந்துள்ளது. மண்டை எலும்பு நொறுங்கி மூளையை அழுத்திக் கொண்டுள்ளதால் அதை சரி செய்ய அவருக்கு இன்று அறுவை சிகிச்சை நடக்கிறது.
முதல்வர் அறை சூறை-போலீசில் புகார்
இதற்கிடையே டாக்டர் அம்பேத்கார் அரசு சட்டக் கல்லூரியின் முதல்வரின் அறையை மாணவர்கள் சூறையாடியது தொடர்பாக போலீசில் புகார் தரப்பட்டுள்ளது.
சுமார் 20 மாணவர்கள் முதல்வர் அறைக்குள் நுழைந்து போன், பேக்ஸ், மின் விசிறி, டேபிள், சேர்கள், கம்ப்யூட்டர் ஆகியவற்றை அடித்து நொறுக்கினர்.
ஜன்னல் கண்ணாடிகளும் அடித்து சேதப்படுத்தப்பட்டன. இதுகுறித்து கல்லூரியின் மேலாளர் எஸ்பிளனேடு போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
காயமடைந்த மாணவர்களுடன் சேதுராமன் சந்திப்பு:
இதற்கிடையே சென்னை சட்டக் கல்லூரியில் நடந்த தாக்குதலில் படுகாயமடைந்த மாணவர்களை அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் நிறுவன தலைவர் சேதுராமன், அகில இந்திய தேவர் பேரவை இணை பொதுச் செயலாளர் எம்.ஆர்.லிங்கம் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications