Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சட்டக் கல்லூரியில் என்ன பிரச்சினை -தீர்வு என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சட்டக் கல்லூரியில் ஜாதிப் பிரச்சினை மிக முக்கியதாக உள்ளது. பிரச்சினைகள் முளைத்து வேர் விடும் இடமாக கல்லூரி விடுதி திகழ்வது குறிப்பிடத்தக்கது.

உண்மை கசக்கும் என்பார்கள். அது தமிழகத்தில் உள்ள கல்லூரிகளுக்கு மிக மிகப் பொருந்தும். எங்குமே இல்லாத அளவுக்கு தமிழக கல்லூரிகளில் ஜாதி ரீதியான மோதல்கள் நீரு பூத்த நெருப்பாக இருந்து வருகிறது. இந்த உண்மை நிஜத்திலும் நிஜம்.

குறிப்பாக சட்டக் கல்லூரிகளில் அரசியல் பிரச்சினயோடு ஜாதிப் பிரச்சினையும் மிகப் பெரிய அளவில் இருக்கிறது.

தற்போது தமிழகத்தையை தலைக்குனிவில் ஆழ்த்தியிருக்கும் சென்னை சட்டக் கல்லூரியில் பல பிரச்சினைகள். அத்தனைப் பிரச்சினைகளையும் இது நாள் வரை கல்லூரி நிர்வாகம் சுத்தமாக கழித்துக் கட்டி வந்துள்ளது தற்போதைய வன்முறை மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

சட்டக் கல்லூரியில் என்ன பிரச்சினை:

சட்டக்கல்லூரியில் மொத்தம் மூன்று விதமான பிரச்சினைகள் இருப்பதாக நடுநிலையான மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

முதல் பிரச்சினை ஜாதி. 2வது அரசியல். இரண்டு பிரச்சினைகளுக்கும் போராட்டக் களமாக இருப்பது கல்லூரி விடுதி.

கல்லூரி விடுதி மனிதர்களால் வசிக்கவே முடியாத அளவுக்கு மகா மோசமாக இருக்கிறது. இதுகுறித்து முன்னாள் டிஜிபி லட்சுமி நாராயணன் தலைமையிலான குழு ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளது. ஆனால் இந்த ஆய்வறிக்கையில் கொடுக்கப்பட்ட பரிந்துரைகளை அமல்படுத்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

விடுதியில் என்ன குழப்பம் ...

விடுதியில் மாணவர்களுக்கு என்று எந்தவிதமான அடிப்படை வசதியும் கிடையாது. மாணவர்களிடையே பாகுபாடும், பிரச்சினைகளும் ஏற்பட இதுவே முதல் மூல காரணம்.

- அடிப்படை வசதிகள் சரியில்லாத காரணத்தால் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் விடுதியைக் காலி செய்து விட்டு தனியார் விடுதிகளுக்கு இடம் பெயர்வது வழக்கமாகி விட்டது.

- ஆனால் தலித் மாணவர்களால் அப்படிச் செய்ய முடிவதில்லை. காரணம், அவர்களது பொருளாதார நிலைமை. இதனால் வேறு வழியின்றி கல்லூரி விடுதியிலேயே தங்கும் நிலைமையில் அவர்கள் உள்ளனர்.

- கல்லூரி விடுதியில் நூலகம் கிடையாது, படிக்கும் அறை கிடையாது. குடிநீர் சப்ளையும் முறையாக இல்லை. உணவு படு மோசம் என்கிறார்கள். இதனால் அக்கம் பக்கம் உள்ள குடிநீர்க் குழாய்களில் மாணவர்கள் தண்ணீரைத் தவறான முறையில் எடுக்கும் வழக்கம் உள்ளது. இதனால் அக்கம் பக்கத்திலும் புகார்கள் எழுந்துள்ளன.

- கல்லூரிக்கு அருகில் உள்ள ஹோட்டல்களுக்கு மாணவர்கள் போய் சாப்பிடுவதும், பல இடங்களில் சாப்பிட்டு விட்டு காசு கொடுக்காமல் ரகளையில் ஈடுபடுவதும் அப்பகுதியில் சகஜமான ஒன்று என்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு மிகப் பெரிய அளவில் ஒரு ஹோட்டலில் வன்முறை ஏற்பட்டு அது மாணவர்களால் சூறையாடப்பட்டது நினைவிருக்கலாம்.

- தலித் மாணவர்களுக்கு அரசு வழங்கும் ஸ்காலர்ஷிப் தொகையான ரூ. 700 உரிய நேரத்தில் தரப்படுவதில்லையாம்.

- விடுதி அறைகளில் 3 மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்கள் பங்கிட்டுக் கொள்ள வற்புறுத்தப்படுகின்றனர். இதனால் தேவையற்ற பிரச்சினைகள், மோதல்கள் ஏற்படுவதாக மாணவர்கள் கூறுகிறார்கள்.

- விடுதியை மேம்படுத்த அரசும், கல்லூரி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தப் பரிந்துரைகளில் ஒன்று கூட இதுநாள் வரை அமல்படுத்தப்படவில்லையாம். இதுதான் பல பிரச்சினைகளுக்கும் காரணமாக கருதப்படுகிறது.

ஜாதி ரீதியில் பல்வேறு பிரச்சினைகளில் மாணவர்கள் ஈடுபடும்போதெல்லாம் அதை சரி செய்ய கல்லூரி நிர்வாகம் உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை. கல்லூரிக்குள் பல்வேறு பிரிவு மாணவர்களும் போஸ்டர்கள் ஒட்டுவது, அடித்துக் கொள்வது, கூட்டம் போடுவது என சுதந்திரமாக இருந்துள்ளனர். இதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

ஆயுதங்களுடன் மாணவர்கள் நடமாடுவது சகஜமாக இருந்து வந்துள்ளது. இதையும் தடுக்க கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. சமீபத்திய தாக்குதலின்போது சக மாணவர்களால் கடுமையாக தாக்கப்பட்ட மாணவர் பாரதி கண்ணன், தனது இடுப்பிலிருந்து கத்தியை எடுத்து தன்னைத் தாக்க வந்த மாணவர்களை தாக்க முயன்றது இதை நிரூபிப்பதாக உள்ளது.

பொதுமக்களுக்கும் இடையூறு ..

கல்லூரிக்குள் மாணவர்களிடையே நிலவும் பிரச்சினை ஒரு பக்கம் என்றால், கல்லூரி மாணவர்களால் பொதுமக்களுக்கும் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படுவது சகஜம்.

சில மாதங்களுக்கு முன்பு பிராட்வே பகுதியில், சட்டக் கல்லூரி மாணவர்கள் ஹோட்டல் ஒன்றுக்குச் சென்று சாப்பிட்டு விட்டு காசு கொடுக்காமல் செல்ல முயன்றதை ஹோட்டல் உரிமையாளர் தட்டிக் கேட்டார். இதையடுத்து ஹோட்டலையே சூறையாடி விட்டனர் மாணவர்கள்.

இதேபோன்ற சம்பவங்கள் இப்பகுதியில் அடிக்கடி நடைபெறுவது வழக்கம் என இப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

சட்டக் கல்லூரி மாணவர்கள் என்பதால் போலீஸார் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்கள். மீறி நடவடிக்கை எடுத்தால் அரசியல் நெருக்குதல்கள், வக்கீல்களின் மிரட்டல் என வருவதால் போலீஸார், சட்டக் கல்லூரி மாணவர்கள் விவகாரத்தில் தலையிடுவதே இல்லை என்பது பொதுவான ஒரு குற்றச்சாட்டு.

சட்டத்தைப் படித்து அதை நடைமுறைப்படுத்தும் மிகப் பெரிய பொறுப்பை கையில் ஏற்கும் நிலையில் உள்ள சட்டக் கல்லூரி மாணவர்கள் சட்டத்தை தங்களது கையில் எடுத்துக் கொண்டு ஆடிய ருத்ரதாண்டவம் மக்கள் மனதிலிருந்து இன்னும் அகலவில்லை.

முதலில் சட்டக் கல்லூரியில் நிலவும் பிரச்சினகைளுக்கு கல்லூரி நிர்வாகமும், அரசும் தீர்வு காண வேண்டும். இனியும் இதுபோன்ற மோசமான சம்பவங்கள் நடந்து விடக் கூடாது. அதற்கேற்றார்போல இனிமேல் கண்டிப்பான நடைமுறைகள் அமல்படுத்தப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+