நிலவில் இந்திய தேசியக் கொடி!-விண்கலம் அனுப்பிய படங்கள்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: நிலவுக்கு இந்தியா அனுப்பிய சந்த்ராயன் விண்கலத்தில் இருந்து பிரிந்த டீம் இம்பாக்ட் புரோப் துணைக் கலம் (Moon Impact Probe) நிலவில் தரையிறங்கி இந்திய தேசியக் கொடியை நாட்டியது. மேலும் நிலவை படமெடுத்தும் அனுப்பி வருகிறது.

அந்தப் படங்களில் முதல் இரண்டை இந்திய விண்வெளி ஆய்வு மையம் இன்று வெளியிட்டது.

பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட சந்த்ராயன் நேற்று முன் தினம் நிலவின் சுற்றுப் பாதையை அடைந்தது. நிலவை 100 கி.மீ. உயரத்தில் பறந்தபடியே ஆராய ஆரம்பித்துள்ள அந்தக் கலத்திலிருந்து ஒரு துணை விண்கலம் நேற்று இரவு 8.45 மணிக்கு நிலவில் தரையிறங்கியது.

இந்திய தேசியக் கொடியை ஏந்திச் சென்ற அந்தக் கலம் நிலவின் தென் புலத்தில் ஒரு பள்ளத்தாக்கில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

35 கிலோ எடை கொண்ட இந்தத் துணைக் கலத்தில் ரேடார், வீடியோ, ஸ்பெக்ட்ரோமீட்டர் ஆகியவை உள்ளன. பெங்களூர் இஸ்ரோ மையத்தின் தரைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் ரேடியோ சிக்னல்களை பெற்று சந்த்ராயனில் இருந்து பிரிந்த அந்தக் கலம் நிலவுக்குள் நுழைந்து, பாராசூட்கள் உதவியோடு குறித்த இடத்தில் மிகச் சரியாக, மிக சாப்ட்டாக தரையைத் தொட்டது.

அதிலுள்ள வீடியோ கேமரா நிலவுக்குள் நுழையும்போதும், தரையிறங்கும்போதும், இறங்கிய பி்ன்னரும் தொடர்ந்து படங்களை எடுத்து தரைக்கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு அந்தக் கலம் அனுப்பியது, அனுப்பிக் கொண்டுள்ளது. அந்தப் படங்களில் முதல் இரண்டு படங்களை இன்று இஸ்ரோ வெளியிட்டது.

அதிலுள்ள ரேடார், தரையிறங்கும்போது அந்தக் கலத்தின் வேகத்தையும் நிலவின் தரைப் பரப்பிலிருந்து அதன் உயரத்தையும் அறிய உதவியது.

அதிலுள்ள ஸ்பெக்ட்ரோமீட்டர், விண்கலம் நிலவில் தரையைத் தொட்ட போது எழுப்பிய தூசியை ஆராய்ந்தது. எனன வகையான கனிமங்கள் அதில் உள்ளன என்பதை ஆராய்ந்து தகவல்களை அனுப்பியது.

அதே நேரத்தில் நிலவை சுற்ற ஆராம்பித்துள்ள சந்த்ராயண் வி்ண்கலம் அடுத்த இரு ஆண்டுகள் தொடர்ந்து நிலவை சுற்றி வந்து அதன் ஒவ்வொரு பகுதியையும் ஆராயும்.

இதன்மூலம் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, சீனா, ஜப்பானுக்கு அடுத்தபடியாக நிலவுக்குள் கலத்தை இறக்கிய பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

2020ம் ஆண்டில் நிலவுக்கு மனிதனை அனுப்பிவிட தீவிரமாக உள்ளது இஸ்ரோ, 2012ம் ஆண்டில் நிலவில் தரையிறங்கி பயணிக்கும் வாகனத்தை (rover) அனுப்பவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+