20 சட்டக் கல்லூரி மாணவர்களை பிடிக்க 25 தனிப் படைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சட்டக் கல்லூரியில் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதலை நடத்திவிட்டு தலைமறைவாகிவிட்ட மாணவர்களை கைது செய்ய 25 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் படைகள் நெல்லை, மதுரை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விரைந்துள்ளன.

சட்டக் கல்லூரியில் கடந்த 12ம் தேதி 2 பிரிவு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட பயங்கர கலவரத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த வன்முறை தொடர்பாக இதுவரை 9 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் 20க்கும் மேற்பட்ட மாணவர்களை கைது செய்ய 25 தனி போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை நகர போலீஸ் கமிஷனராக புதிதாக பொறுப்பேற்றுள்ள ராதாகிருஷ்ணன், தன்னுடன் புதிதாக பொறுப்பேற்ற கூடுதல் கமிஷனர் விஸ்வநாதனின் நேரடி மேற்பார்வையில் இந்தப் படைகளை அமைத்துள்ளார்.

மேலும் 3 துணைக் கமிஷனர்கள், 6 உதவி கமிஷனர்கள், 25 இன்ஸ்பெக்டர்கள், போலீசார் அடங்கிய இந்தப் படையினர் நேற்றிரவே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விரைந்துள்ளனர்.

இதற்கிடையே, வன்முறையில் ஈடுபட்ட மாணவர்களுக்கு சில அரசியல்வாதிகள் அடைக்கலம் கொடுத்துள்ளதாகவும் அவர்களை நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து சம்பவத்தில் தொடர்புடைய 20க்கும் மேற்பட்ட மாணவர்களை இன்று இரவுக்குள் கைது செய்யுமாறு கமிஷ்னர் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வன்முறை தொடர்பாக டிவி, பத்திரிகைகளில் வந்த காட்சிகளை வைத்து இந்த மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் கல்லூரியில் பயிலும் பிற மாணவர்களிடம் விசாரணை நடத்தியும், கலவரத்தில் ஈடுபட்டவர்கள் பற்றிய விவரங்களை அறியப்பட்டுள்ளன.

இந்த மாணவர்கள் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளனவா என்ற ஆய்வும் நடக்கிறது.

மதுரை வாலிபர் கைது:

இந்நிலையில் மதுரையை சேர்ந்த சிவகதிரவன் என்ற வாலிபர் இன்று தனிப்படை போலீசாரிடம் சிக்கினார்.

மருத்துவமனையிலிருந்து சிறை வார்டுக்கு...:

இதற்கிடையே வன்முறையில் ஈடுபட்டு காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்
சித்திரைச்செல்வன் என்ற மாணவரும், இந்தக் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஸ்டேன்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் மீதும் கலவரத்தில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து சித்திரைச் செல்வனை போலீசார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு மாற்றினர். அங்குள்ள கைதிகள் வார்டில் போலீஸ் பாதுகாப்புடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தத் தாக்குதலில் சித்திரைச் செல்வன் தவிர பாரதிக் கண்ணன், ஆறுமுகம், அய்யாத்துரை ஆகியோரும் படுகாயமடைந்ததுள்ளது நினைவுகூறத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+