இளம்பெண்கள் மாயம்-வீடுகளில் கருப்பு கொடி
உடன்குடி: இரு இளம் பெண்கள் காணமல் போன நிலையில் அவர்களை கண்டுபிடிக்க போலீசார் உரிய கவனம் செலுத்தாததைக் கண்டித்து தூத்துக்குடி அருகே வீடுகளில் கருப்புக் கொடிகளை ஏற்றி கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
உடன்குடியை அடுத்த நைனார்பத்தை சேர்ந்தவர் கோபால் நடேசன். இவர் திருச்செந்தூர் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மகள்கள் புவனேஸ்வரி, ஐஸ்வர்யா ஆகியோரை கடந்த 4ம் தேதி முதல் காணவில்லை.
இதுகுறித்து கோபால் நடேசன் மெஞ்ஞானபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் புவனேஸ்வரி மற்றும் ஐஸ்வர்யாவின் டைரிகளில் இன்னொரு மத வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதனால் இவர்கள் வீட்டை விட்டு ஓடி மதம் மாறியிருப்பார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்த வழக்கில் போலீசார் மந்தமாக செயல்படுவதாகக் கூறியும், மாணவிகளை கடத்தியவர்களை உடனே கண்டுபிடிக்க வேண்டும் என்று கோரியும் நயினார்பத்து கிராமத்தில் வீடுகள், மின் கம்பங்கள், டெலிபோன் கம்பங்களில் கருப்பு கொடிகள் ஏற்றப்பட்டன.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து, அந்தப் பெண்களை கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து கருப்புக் கொடிகளை அகற்றினர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications