இலங்கை விவகாரம்: நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அது ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இலங்கைத் தமிழ் மக்கள், ராணுவ தாக்குதலால் தொடர்ந்து படுகொலைக்கும், பாதிப்புகளுக்கும் உள்ளாகி வருகின்றனர். பாதிக்கப்பட்டு வரும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இலங்கைத் தமிழ் மக்களை பாதுகாப்பதற்காக அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்வதற்காக அனைத்துக் கட்சி மற்றும் முக்கிய அமைப்புகளின் கூட்டம் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு சென்னை தியாகராய நகர் தணிகாச்சலம் சாலையில் அமைந்துள்ள சாகித்தியன் ஹோட்டல் கட்டட அரங்கில் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலக அமைப்புகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
அனைவரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications