4 வயது சிறுமி உயிருடன் எரித்து கொலை: தாய்-கள்ளக் காதலன் கைது
சென்னை: கள்ளக் காதலுக்கு தடையாக இருந்த 4 வயது பெண் குழந்தை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டது. இது தொடர்பாக குழந்தையின் தாய் மற்றும் கள்ளக் காதலனை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையில் வசிப்பவர் அமுதா (26). இவரது மகள் தனம் (4).
ராஜா அண்ணாமலைபுரம் கேசவப் பெருமாள்புரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் முருகேசன் (36) நேற்றிரவு 11 மணிக்கு அமுதாவிடம் வந்தார். இருவரும் ஆட்டோவில் உல்லாசமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது திடீரென சிறுமி தனம் உடலில் தீப்பிடித்த நிலையில் அலறியபடி தேனாம்பேட்டை எல்டாம் சாலையில் ஓடி வந்தது. இதைப் பார்த்த பிளாட்பாரவாசிகள் குழந்தையை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு தனத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை இன்று பரிதாபமாக உயிரிழந்தது.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது ஆட்டோ டிரைவர் முருகேசன் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறியுள்ளார். முருகேசனும், அமுதாவும் உல்லாசமாக இருந்தபோது இடையூறாக இருந்த குழந்தை தனத்தை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்றிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து முருகேசனையும், அமுதாவையும் போலீசார் கைது செய்துள்ளனர். சாலையில் குழந்தை உடலில் தீப் பிடித்த நிலையில் ஓடி பலியானது அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications