இந்தோனேஷியா: பயங்கர பூகம்பம்-ஒருவர் பலி, சுனாமி எச்சரிக்கை வாபஸ்

இந்தோனேஷியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள சுலாவேசி தீவில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 7.5 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு சிறிது நேரத்தில் திரும்பப் பெறப்பட்டது.
கொரண்டாலோ மாகாணத்தில் உள்ள க்வான்டாங் கிராமத்தில் இடிபாடுகளில் சிக்கி 56 வயது மதிக்கத்தக்க நபர் இதில் பலியானார். ஏராளமான வீடுகள் மற்றும் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. மேலும் 23 பேர் காயமடைந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்நாட்டு நேரப்படி நள்ளிரவு ஒரு மணியளவில் இந்த பூகம்பம் தாக்கியது. தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். அங்கு தொடர்ந்து பீதி நிலவுகிறது
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 2 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததாகவும், இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்றும் இந்தோனேஷிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications