மாலேகான் குண்டு: நாசிக் கொண்டு செல்லப்பட்ட புரோஹித்

மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக இந்து தீவிரவாத பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் புரோஹித்தும் ஒருவர்.
இவரை கைது செய்த மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார், விசாரணைக்காக மும்பை கொண்டு வந்திருந்தனர். போலீஸ் காவல் மற்றும் சிறைக் காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து அவர் நாசிக் கொண்டு செல்லப்பட்டார்.
அவரை அங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலை நீட்டிக்க போலீஸார் கோரவுள்ளனர்.
முதலில் இன்று காலை புரோஹித்தை கிங் எட்வர்ட் நினைவு மருத்துவமனைக்கு போலீஸார் கொண்டு சென்று மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனர்.
நவம்பர் 5ம் தேதி புரோஹித் கைது செய்யப்பட்டார். மாலேகான் குண்டுவெடி்ப்பு தவிர சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு வழக்கிலும் இவரது பெயர் அடிபடுகிறது. பகவான் என்பவருக்கு 60 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிபொருளை இவர் கொடுத்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
பகவான் மூலம் தீவிரவாதிகளுக்கு வெடிபொருள் கை மாறியதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. பகவான் யார் என்பது குறித்தும், அவரைப் பிடிப்பது குறித்தும் போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வழக்கில் இதுவரை பிரக்யா சிங் தாக்கூர், மேஜர் ரமேஷ் உபாத்யாய், சுவாமி அமிர்தானந்த் என்கிற தயானந்த பாண்டே, சமீர் குல்கர்னி, ஜெகதீஷ் மாத்ரே, ராகேஷ் தாவ்டே, அஜய் ரஹீர்கர், ஷாம்லால் பவர் சாஹு, சிவநாராயன் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications