தடையை மீறி உண்ணாவிரதம்-மூமுக தொண்டர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி அண்ணா சிலை அருகே தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்ற மூவேந்தர் முன்னேற்றக் கழக துணைத் தலைவர் கேப்டன் நடராஜன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்களைப் போலீஸார் கைது செய்தனர்.
சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி வளாகத்தில் இரு பிரிவு மாணவர்களிடையே ஏற்பட்ட கலவரத்தைத் தடுக்க முயலாத காவல்துறையினரைக் கண்டித்தும், பசும்பொன்னில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்யக் கோரியும், இந்தப் போராட்டத்தை நடத்த மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தினர் முயன்றனர்.
ஆனால் உண்ணாவிரதம் இருக்க போலீஸார் அனுமதி மறுத்தன். இருப்பினும் அதை மீறி முயன்றதால் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications