பஞ்சத்தில் பரிதவிக்கும் பனாரஸ் பட்டு நெசவாளர்கள்!
வாரணாசி: உலகப் புகழ் பெற்ற பனாரஸ் பட்டுச் சேலைகளை உருவாக்கித் தரும் நெசவாளர்ள் பெரும் பஞ்சத்தில் தவித்து வருகின்றனராம். உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்து வரும் பொருளாதார நெருக்கடி இவர்களையும் விட்டு வைக்கவில்லை.
பனாரஸ், பட்டுச் சேலைகளுக்குப் புகழ் பெற்றது. ஐஸ்வர்யா ராயின் கல்யாணத்தின்போது அவருக்காக ஆர்டர் செய்யப்பட்ட பனாரஸ் பட்டுச் சேலைகள் மூலம் இவை உலகம் முழுவதும் பிரபலமானது.
இந்தியாவின் முக்கிய பட்டு மையங்களில் பனாரஸும் ஒன்று. இப்படிப் புகழ் பெற்ற பனாரஸ் பட்டுச் சேலைகளை நெய்து தரும் பட்டு நெசவாளர்கள் பஞ்சத்தின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர் என்ற அதிர்ச்சிச் செய்தி வெளியாகியுள்ளது.
இரவு பகலாக உழைத்து பட்டுச் சேலைகளைத் தயாரிக்கும் நெசவாளர்களின் வாழ்க்கை நொந்து நூலாகிக் கிடக்கிறது. சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாத நிலையை நோக்கி அவர்கள் வேகமாகப் போய்க் கொண்டிருக்கின்றனர்.
பெரும்பாலான பட்டு நெசவாளர்கள் இந்த வேலையை விட்டு விட்டு வேறு வேலை தேடி வேறு இடங்களுக்குப் போய் விட்டனர். பலர் ரிக்ஷா ஓட்டியும், டிராலிகளைத் தள்ளியும் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்றனராம்.
பனாரஸ் பட்டு நெசவுத் தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 15 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறதாம்.
பனாரஸ் பட்டு நெசவுத் தொழில் இப்படி நசிவடைய பல காரணங்கள். அதில் முக்கியமானது பொருளாதார நெருக்கடி. இன்னொன்று கடும் போட்டி.
பனாரஸ் பட்டுச் சேலைகளுக்கு இப்போது சூரத் பட்டுச் சேலைகள் கடும் போட்டியாக உருவெடுத்துள்ளன. விலைக் குறைவாக இருப்பதோடு, ஏகப்பட்ட டிசைன்கள் மற்றும் பளபளப்பு காரணமாக சூரத் சேலைகளுக்கு நல்ல கிராக்கி நிலவுகிறது. இதனால் பனாரஸ் பட்டு மீதான மோகம் குறைந்துள்ளது.
இரண்டாவது மாறி வரும் காலத்திற்கேற்ற மார்க்கெட்டிங் உத்திகளை பனாரஸ் பட்டு நிறுவனங்கள் கடைப்பிடிக்காதது.
இதை விட முக்கியமாக படிப்பறிவி்ல்லாத பட்டு நெசவாளர்களை கசக்கிப் பிழியும் இடைத் தரகர்கள் மற்றும் முதலாளிகள். வேலையை மட்டும் அதிகமாக வாங்கி விட்டு குறைந்த கூலியைக் கொடுப்பதால்தான் இந்த வேலையே வேண்டாம் என நெசவாளர்கள் வேறு பாதைக்குத் திரும்பி வருகின்றனர் என்கிறார்கள்.
இந்தத் துயரத்தோடு பொருளாதார நெருக்கடியும் சேர்ந்து கொண்டுள்ளதால் ஒரு காலத்தில் பளபளப்பாக ஜொலித்த பனாரஸ் பட்டுத் தொழில் இன்று சாயம் போய் மங்கிக் காணப்படுகிறது.
-
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications