பாஜக எம்எல்ஏ யோகி தற்கொலை தான்: போலீஸ்

டெல்லி, ராஜேந்தர் நகர் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ யோகி. வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலிலும் இதே தொகுதியில் அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று யோகி தனது வீட்டில் மரணமடைந்தார். அவர் மாரடைப்பால் இறந்ததாக அவரது குடும்பத்தினர் கூறினர். ஆனால், யோகி, தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
இதனால் குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில், யோகி, தனது வீட்டில், தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டிருப்பது தற்போது வெளியாகியுள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவரது கழுத்து நெறிபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதையடுத்தே அவர் மின் விசிறியில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்ட தகவல் வெளியாகியுள்ளது. தற்கொலைக் கடிதம் எதையும் அவர் எழுதி வைக்கவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்த வழக்கை தற்கொலை என மாற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications