ஹர்த்தாலுக்குப் பதில் மறியல் போராட்டம்: தா.பாண்டியன்

சில நாட்களுக்கு முன்பு தா.பாண்டியன் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 25ம் தேதி இலங்கையில் போர் நிறுத்தம் அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி ஹர்த்தால் நடத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது ஹர்த்தால், மறியல் போராட்டமாக மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 17.11.2008 அன்று நடந்த சர்வ கட்சிக் கூட்டத்தில், இலங்கையில் நடந்து வரும் போரை நிறுத்தக் கோரி, 25ம் தேதி தமிழகத்தில் முழு வேலைநிறுத்தம் செய்வது என எடுக்கப்பட்ட முடிவு குறித்து, இலங்கைப் போரினால் இலங்கை தமிழ் மக்கள் கொல்லப்படுவதை தடுக்க வேண்டும் என்பதில், ஒத்த கருத்துள்ள கட்சிகள், அமைப்புகள் இடையே சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால், முழு கடையடைப்பு மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று சில கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.
தமிழக மக்களின் குரல் உறுதியோடு ஒருமித்த குரலாக ஒலிக்க வேண்டும் என்பதால் போராட்ட முறையை மாற்றிட கலந்து ஆலோசிக்கப்பட்டது. அரசியல் கட்சிகள், அமைப்புகளின் வேண்டுகோளுக்கிணங்க முழு அடைப்பு என்து தவிர்க்கப்படுகிறது.
போர் நீடிப்பதால், கோரிக்கை பற்றி மத்திய அரசு தனது நிலையை தெளிவுபடுத்தக் கோரியும், 25ம் தேதி தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களின் முன்னர், இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும், இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று ஒரே கோரிக்கையை மட்டும் வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்று மறியலில் ஈடுபடுவோர் இந்தக் கோரிக்கையைத் தவிர வேறு எந்த முழக்கத்தையும் எழுப்பிட வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.
கட்டுபாட்டுடனும், துக்கத்துடனும், இலங்கை தமிழ் மக்களை காப்பாற்றும் உயரிய பொறுப்புணர்வுடன் தமிழக மக்கள் அனைவரும் போராட்டத்தில் பங்கேற்க அறை கூவி அழைக்கிறோம் என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications